sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : செப் 11, 2011

Google News

PUBLISHED ON : செப் 11, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதல் ஒரு கண்ணாமூச்சி!

* யூகித்துக் கிடப்பதே

காதலின் சூத்திரமாய் போவதால்

காதலும் கண்ணாமூச்சி

விளையாட்டாகிறது!

* இதில் வேடிக்கை என்னவென்றால்...

காதலே நம் கண்களை மறைத்து

நம்மை விளையாட விடுவது தான்!

* திசையற்றுத் திரிகையில் தான்

உணர்கிறோம்

கண்களை மூடி விளையாட

ஆரம்பித்ததன் விளைவை!

* வெற்றியடைய வேண்டிய வேட்கையில்

இன்னும், இன்னும் யூகங்கள்

வியூகங்களாகி தேடச் சொல்கிறது!

* கண்டு பிடித்தோம் எனும் மகிழ்வில்

மனம் திறந்து பார்த்தால்

காதலி கானலாகிட ஏமாறுகிறோம்!

* அவர்கள் இதயத்தை தொட்டு விடுவோம்

என்று துரத்திச் சென்றபின் - காதல்

கனவாய் போவதால் வருந்துகிறோம்!

* எவ்வளவு தூரம் நெருங்கிச் சென்றாலும்

போக்குக் காட்டி மறைவதால் —

விளையாட்டை

தொடர முடியாது ஓய்ந்திடுகிறோம்!

* விளையாட்டை ஆரம்பித்தவர்களோ

முடித்து வைக்க விரும்பாமல்

நம்மை மட்டும் தொடர வைத்து

ரசிக்கின்றனர்!

* கண்ணாமூச்சியில் தோற்றபின் தான் புரிகிறது...

அவர்கள் விளையாட வரவில்லை

வேடிக்கை பார்க்கத்தான் என்று!

— ரத்தின மூர்த்தி, திருப்பூர்.






      Dinamalar
      Follow us