PUBLISHED ON : ஏப் 01, 2012

அ நிறம் | அளவு
மனிதனைத் தவிர...
* வண்ணத்துப்பூச்சி
பசியாறிய பின்னும்
பறித்த பூக்களில்
மிச்சமிருக்கிறதுதேன்!
* குருவிகள்
கொத்தித் தின்ன பிறகும்
அப்படியே இருக்கிறது
முற்றத்தில் காய வைத்த நெல்!
* அணில் கடித்த பிறகும் கூட
குறையாமலேயே இருக்கிறது
கனியும், சுவையும்!
* பசு மேய்ந்த பிறகும்
நிலம் மறைக்க
எஞ்சியிருக்கிறது பசும்புல்!
* புலிகளும், மான்களும்
எண்ணிக்கையில்
எப்போதும்
சமன் செய்து கொள்கின்றன
பற்றாக்குறை
நிகழ்ந்து விடாமல்!
* தான் உண்டது போக,
மீதியைக்
கட்டியெடுத்து போகும்
சுயநலம்,
ஐந்தறிவு உயிர்கள்
எவற்றிற்கும் இல்லை...
தன்னை ஆறறிவாய்
பிதற்றிக் கொண்டு திரியும்
மனிதனைத் தவிர!
— கீர்த்தி, கொளத்தூர்.
