தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - வாழ்க்கை பயங்கள்!

கவிதைச்சோலை - வாழ்க்கை பயங்கள்!

கவிதைச்சோலை - வாழ்க்கை பயங்கள்!


PUBLISHED ON : மே 21, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கையைக் கண்டு பயந்தேன்

அதன் வசந்தத்தை

அனுபவிக்காத வரை!

அன்பைக் கண்டு பயந்தேன்

அது என் இதயத்தில்

இருள் போன்ற கருமையை நீக்கி

நிகரில்லா வெளிச்சத்தை வீசும் வரை!

வெறுப்பைக் கண்டு பயந்தேன்

அது, அறியாமை என்று

அறியும் வரை!

ஏளனங்களைக் கண்டு பயந்தேன்

எனக்குள்

சிரிக்கத் தெரியாத வரை!

தனிமையைக் கண்டு பயந்தேன்நான் தனியாக இருக்க

கற்றுக்கொள்ளும் வரை!

தோல்விகளை கண்டு பயந்தேன்

தோல்வியே

வெற்றிக்கு அறிகுறி என்று

உணரும் வரை!

வெற்றிகளை கண்டு பயந்தேன்

வெற்றியே

வாழ்க்கையின் சந்தோஷம்

என்று அறியும் வரை!

ஒதுக்கப்படுவதை கண்டு பயந்தேன்

எனக்குள்

தன்னம்பிக்கை வளரும் வரை!

வலிகளை கண்டு பயந்தேன் - அது வளர்ச்சிக்கு தேவை என்று

அறியும் வரை!

உண்மையைக் கண்டு பயந்தேன்

பொய்மையின்

முகங்களை பார்க்கும் வரை!

வயதானதை அறிந்து பயந்தேன்

வாழ்க்கையில் பண்பட்டு

விட்டேன் என்று உணரும் வரை!

நடந்ததை நினைத்து பயந்தேன்

அது

இனி நடக்காது என்று நம்பும் வரை!

நடக்கப் போவதை நினைத்து பயந்தேன்நடந்தது எல்லாமே

நன்றாகவே நடந்தது...

நடக்கப் போவதெல்லாம்

நன்றாகவே நடக்கும் என்று

உணரும் வரை!

மரணத்தை கண்டு பயந்தேன்

அது முடிவல்ல, புதிய ஆரம்பத்தின்

துவக்கமே என்று உணரும் வரை!

— வி.எஸ்.பாலா, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us