தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைசோலை!

கவிதைசோலை!

கவிதைசோலை!


PUBLISHED ON : அக் 26, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 26, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனித மனம்!

இதயம்

இமயத்தை விட உயரமானது!

இந்து மகா சமுத்திரத்தை விட

ஆழமானது...

உலக அதியங்களை விட

அற்புதமானது!

மனித இதயங்கள்

இருக்கும் இடங்களால்

வேறுபட்டாலும்

இயக்கங்களால்

ஒன்றுபடுகின்றன!

ஒருவரின் இதயத்தில்

இடம் பிடித்தவர்

மற்றவருக்கு பிடிப்பதில்லை!

பாசம்

சில வேளைகளில்

வேஷங்களாய்

பரிணமிக்கும் போதும்

மோசமென

முட்டித் தள்ளிவிடாமல்

கருணை கலந்து

மீண்டும் இதயம்

நேசக்கரம் நீட்டும்!

ஏங்கியழும் குழந்தையை

எங்கேனும் கண்டால்

ஏனென்று

அழும் காரணத்தை

இதயம்

கேட்கும்!

சொந்த

பந்தங்களால்

பந்தாடப்படும் போது

இதயம்

துவண்டு விடுவதில்லை...

எதிர்நீச்சலடித்து

என்றும்

தன் இருப்பை

தக்க வைத்துக் கொள்கிறது!

ஒருவரை திட்டித்

தீர்ப்பதிலோ

குறைகளைக் கொட்டித்

தீர்ப்பதிலோ

மனம் சாந்தப்படுவதில்லை!

ஒருவருக்கொருவர்

விட்டுக் கொடுப்பதால்

மட்டுமே

மனித மனம்

வெற்றி கொள்கிறது!

மனித மனங்கள் ஒவ்வொன்றும்

புனிதமானது என்பதை

ஒவ்வொருவரின் மனமும்

மனதார

உணர்ந்துகொள்ளும் போது

இப்பூவுலகம் அனைத்தும்

பொன்னுலகமாய்

நிறம் மாறும்!

— ஜோதிபாரதி, தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us