தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை...

கவிதைச்சோலை...

கவிதைச்சோலை...


PUBLISHED ON : ஏப் 20, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 20, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நன்றி சொல்லுங்கள்!

குறை சொல்பவர்களுக்கு

நன்றி சொல்லுங்கள்

ஏனென்றால்,

உங்களை நீங்களே

செதுக்கிக் கொள்வதற்கு

அவர்கள்தான்

உளி கொடுக்கின்றனர்!

குறை சொல்பவர்கள்

உங்கள் வாடிக்கையாளராக இருந்தால்

உங்கள் வளர்ச்சிக்கு

அவர்கள் வழி சொல்கின்றனர்!

குறை சொல்பவர்கள்

உங்கள் நண்பர்களாக இருந்தால்

உங்களை நல்வழிப்படுத்த

அவர்கள் முயற்சிக்கின்றனர்!

குறை சொல்பவர்கள்

உங்கள் ஆசிரியர்களாக இருந்தால்

உங்களைச் சிகரங்களாக்க

அவர்கள் சிரமம் எடுக்கின்றனர்!

குறை சொல்பவர்கள்

உங்கள் பெற்றோராக இருந்தால்

நீங்கள் அவையத்து முந்தியிருக்க

அவர்கள் விரும்புகின்றனர்!

குறை சொல்பவர்கள்

உங்கள் மேலதிகாரிகளாக இருந்தால்

உங்கள் முன்னேற்றத்திற்குச்

சிறகுகள் தருகின்றனர்!

குறை சொல்பவர்கள்

உங்கள் போட்டியாளர்களாக இருந்தால்

நீங்கள் வெடித்தெழுவதற்காக

அவர்கள் நெருப்புத் திரி வைக்கின்றனர்!

ஆம்...

குறை சொல்பவர்கள்

முன்னேற்றத்தின் திசையை நோக்கியே

உங்களை விரட்டுகின்றனர்!

ஆகவே!

குறை சொல்பவர்களுக்கு

நன்றி சொல்லுங்கள்!

கவிதாசன், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us