PUBLISHED ON : மார் 27, 2011

அ நிறம் | அளவு
காதல் டைரிகள்!
* எல்லாப் பக்கத்திலும்
எழுதியிருப்பதுன்
பெயர்;
எழுதாததுன்
துரோகம்...
* குறிப்பேட்டை
எரித்தாலும்...
குற்றங்கள்
மரிக்காது...
* வாலிபத்து
அபத்தங்களாய்
எழுதப்பட்டிருந்தும்
வாய்மையானவை...
* கனவென
எழுதியது
தாராளம்...
எழுதாததும்
ஏராளம்...
* எப்பக்கம்
திருப்பினாலும்
தெரிவது
திருத்தவியலா
வருத்தங்கள்...
* குறிப்பெழுதினேன்
மணக்க...
நீ
மறக்க...
*காதலன்
குறிப்பெழுதுவான்...
சில காதலிகள்
குழிப்பறிப்பர்...
* ஆதலினால்,
சில
குறிப்பேடுகள்
கல்யாணப் பத்திரிக்கை...
பல
குற்றப் பத்திரிக்கை!
— ச.கிரிகா, சென்னை.
