தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிச்சோலை!

கவிச்சோலை!

கவிச்சோலை!


PUBLISHED ON : ஏப் 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கையோடு இயைந்த வாழ்வு இதுதானா?

* இருண்டு கிடந்த சமூகத்தின்

விடியல் கண்டான்...

சின்னச் சின்ன ஆசைகளில்

சிம்மாசனமிட்டான்!

* கல்லை சிற்பமாக்கினான்...

மின்னலை கைது செய்து

மின்சாரம் கண்டான்!

* நிர்வாணத்திற்கு விடை கொடுத்து

தாவரங்களுக்குள்

ஒளிச்சேர்க்கை செய்யும்

உத்தி கண்டான்!

* கண்ணீர் சந்தோஷத்தின்

சமிக்ஞையை தரிசித்து

மனிதனின் மகத்துவத்தை

பதிவு செய்தான்!

* சூரியன் தடுக்கி விழுகையில்

சிந்தித்தான்...

சிந்தித்ததெல்லாம்

சித்திரமாக்கினான்!

* இயற்கையின்

முதுகில் சவாரி செய்து

கணினி மயமாக்கினான்!

* ஆனால் —

பூமியின் தோளில் வெயில் போர்த்தி

பகலின் மடியில் வெப்பச் சலனம்

அந்தி ஓய்வெடுத்தாலும்

அடங்கவில்லை அனல்காற்று!

* பூமியின் அக்னி கதவு

திறந்து கொண்டதால்

பிரபஞ்ச நுரையீரல்

சொந்த மூக்கில் சுவாசிக்கிறது!

* கடலின் சுவாசப்பை அடங்கி

காற்று ஓய்வெடுக்க சென்றதால்

பற்றி எரிகிறது பனிமலை!

* அனல் சொட்டச் சொட்ட

அக்னி மழையை

அள்ளித் தெளிக்கிறது இயற்கை...

நீரின்றி காய்கிறது தேசம்!

* கார்போ-ஹைடிரேட் புகை

காற்று மண்டலத்தை அடைத்து

வேனில் காற்று வீசி

வியர்வை நரம்பு அறுக்கிறது!

* வெப்பச் சலனம்

மழைக்காலம் பொய்த்து போய்

பூமி ரத்தகளமாகி

வாழ்வின் சாவுக்கு

வழி வகுத்து விட்டது

இயற்கை அழிந்து!

* காணி நிலம் கூட இல்லை

மயிற்கூச்சங்களாய்

வளர்ந்து நிற்கிறது கட்டடங்கள்!

* ஏரிகள், குளங்களெல்லாம்

தொழிற்சாலை...

தண்ணீரில் ரசாயன கலவை...

வாழ்வியல் முழுவதும்

வைரஸ் கிருமிகள்!

* இயற்கையை வென்று விட்டதாய்

ஆர்ப்பரிக்கிறான்...

மருந்தை உணவாக

உட்கொள்வது தெரியாமல்!

* இயற்கையின் பேரழிவுக்கு

மனிதன் எடுத்த ஆயுதம்

விஞ்ஞான வளர்ச்சி!

* விஞ்ஞானத்தை கொண்டு

இயற்கையை

வளர்க்க முடியுமா?

* பருவநிலை மாற்றங்களால்

கவலையுற்ற பூமாதேவி...

அயர்ந்து கண்ணுறங்குகிறாள்...

இயற்கையோடு இயைந்த வாழ்வு

இதுதானாவென்று!

-க. மோகன், அறந்தாங்கி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us