
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம் நாட்டில், நடிகர்களில் சிலர், அரசியலில் குதித்து, மக்களுக்கு சேவை செய்ய போவதாக கூறி, வீட்டு பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வர். ஆனால், வெளிநாடுகளில் அப்படி இல்லை. நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை செய்ட் ஹென்ஷா, சமீபத்தில், அரசியலில் குதித்துள்ளார். தற்போது 45 வயதாகும் இவர், தன், 21வது வயதில், திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை, 70க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார். 'திடீரென அரசியலுக்கு வருவதற்கு என்ன காரணம்?' என்று அவரிடம் கேட்ட போது, 'எனக்கு விருப்பமுள்ள துறையில் ஈடுபட்டால், நிச்சயமாக வெற்றி பெறுவேன்; அந்த நம்பிக்கையில் தான் அரசியலில் குதித்தேன்...' என்கிறார் நடிகை. நம் நாட்டில் மார்க்கெட் சரியும் போதோ, அல்லது படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டாலோ தான், நடிகர்கள் அரசியலில் குதிப்பர்.
— ஜோல்னா பையன்.