PUBLISHED ON : மே 21, 2023

அ நிறம் | அளவு
'கொலைகார மீன்' என அழைக்கப்படும், ஆசியன் கார்பா வகை மீன்கள், மற்ற மீன்களை அழிப்பதில் கில்லாடி ஆக இருக்கின்றன. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து, 1970ல் அமெரிக்காவுக்கு இந்த கொலைகார மீன்கள் கொண்டு வரப்பட்டன.
உணவுக்காக கொண்டு வரப்பட்ட மீன்கள், 'குடியுரிமை' பெற்று அங்கேயே தங்கி, மற்ற மீன்களை கொன்று, சாப்பிட்டு வருகின்றன.
இதனால், மற்ற இன மீன்கள் அழிவை சந்தித்து வருகிறது. மிக வேகமாக இன பெருக்கம் செய்யும் கொலைகார மீன்களை கட்டுப்படுத்த தெரியாமல், தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறது, அமெரிக்க மீன்வள துறை.
ஜோல்னாபையன்
