தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இளவரசியும் விதிவிலக்கல்ல!

இளவரசியும் விதிவிலக்கல்ல!

இளவரசியும் விதிவிலக்கல்ல!


PUBLISHED ON : அக் 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஷாப்பிங்' செய்வது, பெண்களுக்கு ரொம்பவே பிடித்தமான விஷயம். இந்த விஷயத்தில், நாட்டையே ஆளும் இளவரசிகளும் விதிவிலக்கில்லை போலிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டு, இளவரசர் வில்லியம்சின் மனைவியும், இளவரசியுமான, கேத் மிடில்டன், சமீபத்தில், தன் மகன் ஜார்ஜை, பள்ளியில் விடுவதற்காக, லண்டன் நகரில், காரில் அழைத்துச் சென்றார்.

அப்போது, 'பட்டர்சா பார்க்' என்ற இடத்தில், விதவிதமான அலங்காரங்களுடன், 'ஷாப்பிங்' கண்காட்சி நடத்தப்படுவதை காரில் இருந்தபடியே பார்த்தார், கேத். மகனை, பள்ளிக்கு அழைத்துச் செல்வதை மறந்து, நேரடியாக, அந்த கண்காட்சி நடக்கும் இடத்துக்கு காரை திருப்பும்படி உத்தரவிட்டார்.

அரை மணி நேரத்துக்கு மேலாக, அங்கு, 'ஷாப்பிங்' செய்தார். அதற்கு பின் தான், பள்ளி ஞாபகம் வந்தது. அவசர அவசரமாக, 'ஷாப்பிங்'கை முடித்த இளவரசி, மகனுடன் பள்ளிக்கு வேகமாக விரைந்தார்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us