தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உலகின் உயரமான குழந்தை ! ரந்தீர் சிங்

உலகின் உயரமான குழந்தை ! ரந்தீர் சிங்

உலகின் உயரமான குழந்தை ! ரந்தீர் சிங்


PUBLISHED ON : அக் 24, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் மிகவும் உயரமானவர், உலகமகா குள்ளர் என்றெல்லாம் பெயர் எடுத்தவர்கள் இருப்பர். உலகில் மிகவும் உயரமான குழந்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இப்படி ஒரு குழந்தை இந்தியாவில் தான் உள்ளது. உ.பி., மாநிலம் மீரட் நகரில் வசிப்பவர் ஸ்வெல்தனா சிங். ஆசியாவின் மிக உயரமான பெண் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் உயரம் ஏழு அடி இரண்டு அங்குலம். கணவரை விட அதிகம் உயரம் கொண்டவர். இவர் மகன்தான் உலகின் அதிக உயரமான குழந்தை என்ற பெருமையைப் பெற்றுள்ளான். அந்த குழந்தையின் பெயர் கரண் சிங்; வயது  இரண்டரை. அதற்குள் அவன் உயரம் நான்கு அடி ஐந்து அங்குலம். இவன் வயது குழந்தைகளை விட, இரண்டு மடங்கு உயரமாக இருக்கும் கரண் சிங், 10 வயது சிறுவன் போல் உயரமாக காட்சி தருகிறான்.

கரண் சிங் குறித்து அவன் தாய் ஸ்வெல்தனா சிங் கூறியதாவது:

கரண் சிங் பிறக்கும் போதே இரண்டு அடி இருந்தான். இப்போது என் உயரத்தில் பாதி இருக்கிறான். விரைவில் உயரத்தில் என்னை விட அதிகமாகி விடுவான். குழந்தைகளுக்கான உடை எதையும் அவனுக்கு அணிவிக்க முடிவதில்லை. பெரிய ஆண்களுக்கு உரிய ஆடைகள் தான் அவனுக்கு பொருத்தமாக உள்ளன என்கிறார்.

கரண் சிங்கின் அப்பா சஞ்சய் சிங்கின் உயரம் ஆறு அடி, ஏழு அங்குலம்.

இந்த உயரமான குடும்பம், மற்ற குடும்பத்தினரை விட ஒவ்வொரு மாதமும் மூன்று மடங்கு அதிகமாக சாப்பாட்டிற்கே செலவு செய்ய வேண்டியுள்ளது. கரண் சிங்கும் பெரிய சாப்பாட்டு ராமன் தான்.

கரண்சிங்கை முதலில் நர்சரி பள்ளியில் சேர்க்க அவன் தாய் அழைத்துச் சென்றார். அவனைப் பார்த்ததும் பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் மறுத்து விட்டனர். 'கரண்சிங்கின் வயது அதிகமாக இருக்கும். எல்.கே.ஜி., வகுப்பில் எல்லாம் சேர்க்க முடியாது...' எனக் கூறினர். பின்னர், பிறப்பு சான்றிதழை காட்டிய பின்னர்தான், அவனை பள்ளியிலேயே சேர்க்க முடிந்தது.

கரண்சிங்கின் தாய் கூடைப்பந்து போட்டியில் பெரிய வீராங்கனை. தன் மகனையும் கூடைப்பந்து போட்டியில் வீரராக வளர்க்க ஆசைப்படுகிறார். 'அவன் சிறப்பாக விளையாடினால், அமெரிக்காவுக்கு அனுப்பி பயிற்சி கொடுப்பேன்...' என்கிறார் ஸ்வெல்தனா.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us