sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 13, 2015

Google News

PUBLISHED ON : செப் 13, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஆல்பம் தயாரிக்கும் சச்சின் டெண்டுல்கர்!

ஏற்கனவே, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, 'தீம்' இசை அமைத்துக் கொடுத்தவர், ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில், தற்போது, உலக அளவில் உள்ள விளையாட்டு வீரர்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆல்பத்துக்கு இசையமைக்கிறார். இந்த ஆல்பத்தை தயாரிப்பவர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். சமீபத்தில், விளையாட்டுப் போட்டி சம்பந்தமாக சென்னைக்கு வந்த சச்சின், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டிற்கு சென்று, அவரிடம் அந்த ஆல்பம் குறித்து, இரண்டு மணி நேரம் பேசியுள்ளார். விரைவில், ஆல்பத்துக்கான இசைப்பதிவுகள், மும்பையில் நடைபெற உள்ளது.

சினிமா பொன்னையா

மீண்டும் நஸ்ரியா!

நேரம் மற்றும் ராஜா ராணி போன்ற, படங்களில் நடித்தவர் நஸ்ரியா. மலையாள நடிகர் பஹத்பாசிலை திருமணம் செய்து, நடிப்புக்கு, 'குட்பை' சொன்னவர், தற்போது, தன் கணவர் பஹத்பாசில் நடிக்கும் மலையாள படத்தில், மீண்டும் நாயகியாக நடிக்கிறார். இதையடுத்து, மற்ற கதாநாயகர்களுடன் நடிக்க அவரை வாய்ப்புகள் முற்றுகையிட்டபோது, 'இப்போதைக்கு அந்த யோசனை இல்லை; என் கணவருடன் அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி, பின், முடிவு சொல்கிறேன்...' என்று அந்த இயக்குனர்களை திருப்பி அனுப்பி விட்டார். போயும் வந்ததும் பொன்னம்பலம்; திரும்பி வந்தால் திருவம்பலம்!

எலீசா

த்ரில்லர் கம் காமெடி படத்தில் த்ரிஷா!

முன்னணி கதாநாயகர்கள் எட்டாக்கனியாகி விட்டதால், இப்போது கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் த்ரிஷா. அவ்வகையில், அரண்மனை - 2 படத்தை அடுத்து, நாயகி என்றொரு த்ரில்லர் மற்றும் காமெடி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை, முழுக்க முழுக்க த்ரிஷாவையே மையப்படுத்தி உருவாகிறது. காமெடி படம் என்றாலும், படத்தின் கிளைமாக்சில் ஒரு கொலை செய்கிறார் த்ரிஷா. அத்துடன், சில காட்சிகளில் பேயாகவும் வந்து மிரட்டுகிறார். அதனால், 'இப்படம் எனக்கு புதிய அனுபவம்...' என்று கூறும் த்ரிஷா, 'இது, என் திரைப் பயணத்தில் ஒரு மைல் கல் படமாக இருக்கும்...' என்கிறார். ஆகாச வல்லிடி அதிர இடித்தது!

எலீசா

சுயசரிதை எழுதும் கமல்!

ஒரு காலத்தில், கமல் நடித்த படங்களில், அவரது கவிதை போன்ற படைப்புகளும் இடம் பெற்றன. ஆனால், தற்போது சில படங்களுக்கு அவரே கதை, திரைக்கதை எழுதுவதால், இலக்கியத்தில் அவரது பங்களிப்பு குறைந்து விட்டது. இந்நிலையில், தான் எழுதிக் கொண்டிருக்கும் தன் சுயசரிதைக்கு, 'சிட்டிசன் கே' என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளார். அத்துடன், 'என்னைப் போல் ஒருவன்' என்ற பெயரில், அப்புத்தகத்தை தமிழில் வெளியிட இருக்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

நாட்டாமை  நடிகரை, சண்டைக்கோழி நேரடியாக எதிர்த்து வரும் நிலையில், நாட்டாமையின் வாரிசு நடிகையோ, சண்டைக்கோழியுடன் ஊர் சுற்றுகிறார். இதற்கு, ரயில் நடிகை, பகிரங்க எதிர்ப்பு தெரிவித்தும், அவர் அடங்கவில்லை. இதனால், நாட்டாமைக்கு மேலும் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

அங்காடித்தெரு நடிகை, மேல்தட்டு நடிகர்களை, குறி வைத்து காய்களை நகர்த்தி வந்த போதும், தளபதி நடிகர் மட்டும், அவர் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. இதனால், 'செம' கடுப்பில் இருக்கும் நடிகை, ஏதாவது நள்ளிரவு பார்ட்டிகளுக்கு அவர் விசிட் அடிக்கும்போது, தானும், 'என்ட்ரி' கொடுத்து, அவரை மந்திரிக்க வேண்டும் என்று, தக்க தருணம் பார்த்து வருகிறார்.

தான் நாயகனாக நடித்த அப்படத்தை தானே வெளியிட்டார் விவேகமான காமெடியன். ஆனால், அப்படத்தை தயாரித்தவரிடம், படத்தின் வசூலுக்கு பின், உங்களுக்கான பணத்தை தருகிறேன் என்று சொன்ன நடிகர், இப்போது படத்திற்கு சுத்தமாக வசூல் இல்லை என்று சொல்லி, தயாரிப்பாளருக்கு சேர வேண்டிய பணத்தை தர மறுக்கிறார். கேட்டால் மிரட்டுகிறார். இதனால், கேரளாவைச் சேர்ந்த படாதிபதி, 'இப்படி என்னை மோசம் செய்து விட்டாரே நடிகர்...' என்று, கரைந்து கொண்டிருக்கிறார்.

சினி துளிகள்!

* போடா போடியை தொடர்ந்து பாலா இயக்கும் படமொன்றில் நடித்து வருகிறார் வரலட்சுமி.

* சூரி, 'மெயின்' காமெடியனாக நடிக்கும் படங்களில், துணை காமெடியன் வேடத்தில் நடிக்க துவங்கியிருக்கிறார் விவேக்.

* ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, தற்போது அவர் இயக்கியுள்ள, தரமணி படத்தில், 'கெஸ்ட் ரோலில்' நடித்துள்ளார்.

* தென்னிந்திய அளவில் அஜித்துக்கான ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் என்று, புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us