PUBLISHED ON : ஏப் 10, 2011

அ நிறம் | அளவு
பிரபல மென்பொருள் (சாப்ட்வேர்) தயாரிப்பு நிறுவனம், 'விப்ரோ!' இதன் தலைமை செயல் அதிகாரியாக சமீபத்தில் டி.கே.குரியன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய். இது மட்டுமல் லாமல், அவ்வப் போது சம்பள உயர்வு, செயல் பாட்டிற்கு ஏற்ப ஊக்க ஊதியம், விடுமுறை அலவன்ஸ், வீட்டு வாடகை, கம்பெனி செலவிலேயே டிரைவருடன் கார் போன்ற சலுகை களும் உண்டு. இந்திய ஐ.டி., நிறுவனங்களில் மிக அதிக ஊதியம் வாங்குபவர் என்ற பெருமையை குரியன் பெற்றுள்ளார்.
கடந்த, 2009ம் ஆண்டு, டி.சி.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமதுரை, 3.61 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். அதே காலகட்டத்தில் இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி கோபால கிருஷ்ணன், 1.01 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார்.
— ஜோல்னா பையன்.
