PUBLISHED ON : ஜூன் 10, 2018

அ நிறம் | அளவு
பத்து பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகள் மத்தியில், கேரளாவில், ஆலப்புழா மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி இளைஞர்கள், ஏழைகளின் பசி தீர்த்து வருகின்றனர்.
ஆலப்புழா மாவட்டத்தில், ஏழைகள் அதிகம் வாழும் கடலோர கிராமமான பாதிராப்பள்ளியில்,'ஜனகீய பக் ஷணசாலா'வில் தினமும், 700க்கும் மேற்பட்டோருக்கு தரமான உணவளிக்கின்றனர்.
பணம் உள்ளவர், சாப்பிட்ட பின் காசு கொடுக்கலாம்; இல்லாதவர்கள், ஒரு பைசா கூட தராமல் உண்ணலாம்.
அருகில் உள்ள பொறியியல் கல்லுாரி மாணவர்கள், இங்கு வந்து, பாத்திரம் கழுவும் பணியை செய்வதுடன், தங்களால் ஆன பண உதவியும் செய்கின்றனர்.
கொள்ளையடிக்க, அரசியலில் குதிப்போர், இதைக் கண்டு, வெட்கி தலைகுனிய வேண்டும்.
— ஜோல்னாபையன்.
