தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மொபைல் போன் மூலம் குறுக்கு வழி

மொபைல் போன் மூலம் குறுக்கு வழி

மொபைல் போன் மூலம் குறுக்கு வழி


PUBLISHED ON : அக் 31, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எப்போதும், எங்கேயும், யாருடனும் தொடர்பு கொள்ள மொபைல் போன் மிகப்பெரும் உதவியாக உள்ளது. ஆனால், இதே மொபைல் போன் மூலம், பலர் குறுக்கு வழிகளையும் உருவாக்குகின்றனர். பெரிய, பெரிய கண்காட்சிகளில், 'மேஸ்' எனப்படும் நூதன விளையாட்டு இடம் பெற்றிருக்கும். ஒரு வழியாக சென்று, இன்னொரு வழியாக வெளியே வர வேண்டும். ஆனால், எந்த வழியாக சென்றாலும் ஏதாவது ஒரு இடத்தில் தடை இருக்கும். எனவே, உள்ளே நுழைந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவிப்பர்.

இந்த மேஸ் விளையாட்டுக்கு புகழ் பெற்ற இடம் லண்டனில் உள்ளது.வில்ட்ஷயர் என்ற இடத்தில் லாங்லீட் சபாரி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் தான் உலகின் மிகப்பெரிய மேஸ், பெரிய புதர் செடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மேஸ் அரங்கத்தில் நுழைபவர்கள் பல மணி நேரம் ஆனாலும், வெளியே வர முடியாமல் தவிப்பர். மூன்று கி.மீ., தூரம் உள்ள இந்த மேஸ் அரங்கத்தை சாதாரணமாக சுற்றி வரவே இரண்டு மணி நேரம் ஆகும். ஆனால், சமீபத்தில் இந்த மேஸ் அரங்கத்திற்குள் சென்ற சிலர், ஒரு சில நிமிடங்களில் மிகச்சரியாக வெளியே வந்தனர். குழப்பமான பாதையில் எப்படி அவர்களுக்கு வழி தெரிந்தது என தெரியாமல் பூங்கா நிர்வாகிகள் முதலில் திணறினர். பின்னர், சிலரை பின் தொடர்ந்து சென்று பார்த்த போதுதான் உண்மை தெரிந்தது. அவர்கள், அனைவரும் கையில் பிளாக்பெர்ரி மொபைல் போனை வைத்திருந்தனர். நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை கண்டுபிடிக்க உதவும் ஜி.பி.எஸ்., எனப்படும் நவீன செயற்கைகோள் தொடர்பு வசதி மூலம் வழியை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். வெப்சைட்டில், 'கூகுள் எர்த்' சைட்டிற்கு சென்று, மேஸ் இருக்கும் இடத்தின் மேல் பகுதியை மொபைல் போனில் பார்த்து, அதன் மூலம் சுலபமாக மேஸ் அரங்கத்தில் வழியை அவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து மேஸ் அரங்க மேலாளர் டிம் பென்ட்லி கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் நான்கு லட்சம் பேர் இந்த மேஸ் அரங்கத்தில் இருந்து வெளியே வர முடியாமல் தவிப்பது வழக்கம். உடனே, எங்கள் உதவியாளர்கள் அவர்களுக்கு சரியான வழியை காட்டி வெளியே அனுப்புவர். சமீப காலமாக சிலர், வெகு சுலபமாக வெளியே வந்தனர். அவர்கள், மொபைல் போனில் வழி காட்டும் மேப் மூலம் வெளியே வருவது எங்களுக்கு தெரிந்தது. இனி, பூங்காவிற்கு வருபவர்களிடம் மொபைல் போனை வாங்கி வைக்கலாமா என யோசித்து வருகிறோம். — இவ்வாறு பென்ட்லி கூறினார்.

 மொபைல் போன் எதற்கெல்லாம் உபயோகமாகிறது பாருங்கள்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us