/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஆறு கர்ப்பிணிகளும், ஒரு கோமாளியும்!
/
ஆறு கர்ப்பிணிகளும், ஒரு கோமாளியும்!
PUBLISHED ON : மார் 21, 2021

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்தவர் மைக். கோமாளித்தனமாக எதையாவது செய்து, பரபரப்பு செய்திகளில் இடம்பெறுவது, இவரது வழக்கம்.
சமீபத்தில், நைஜீரியாவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஒருவரது திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சர்ச்சையையும் கிளப்பி விட்டார்.
திருமணத்துக்காக செல்லும்போது, தன்னுடன் ஆறு கர்ப்பிணி பெண்களையும் அழைத்துச் சென்றார். இந்த ஆறு பெண்களுடன் இணைந்து, மேடையேறி, மணமக்களை வாழ்த்தினார்.
'இவர்கள் யார்?' என, மைக்கிடம், அனைவரும் கேட்கவே, 'இவர்களைப் பற்றிய விஷயம் முக்கியமில்லை. ஆனால், அவர்கள் வயிற்றிலிருக்கும் குழந்தைகளுக்கு, நான் தான் அப்பா...' எனக் கூறி, அனைவரையும் அதிர வைத்ததுடன், அவர்களது வயிற்றிலும் ஆசையுடன் முத்தமிட்டார்.
தற்போது நைஜீரியாவில், மைக் கூறியது உண்மையா, பொய்யா... அந்த பெண்கள் யார் என்பது குறித்த விஷயம் தான், பரபரப்பாக பேசப்படுகிறது.
— ஜோல்னாபையன்

