தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா?

தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா?

தர்மம் செய்வதில் இவ்வளவு விஷயங்களா?


PUBLISHED ON : மே 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதர்களுக்கு ஆசார, அனுஷ்டானம் போன்ற கட்டு திட்டங்களை ¬முன்னோரும், மகரிஷிகளும் ஏற்படுத்தியுள்ளனர்; அதன்படி நடப்பது நல்லது என்றனர். இதில், சந்தியா வந்தனம் செய்வதும் ஒன்று. சந்தியா வந்தனம் செய்ய வேண்டிய நேரங்களும் சொல்லப்பட்டுள்ளது.

'காணாமல், கோணாமல், கண்டு கொடு!' என்பது வாக்கியம். அதாவது, சூரியன் கண்ணுக்குத் தெரியாத போது, சூரிய உதயத்துக்கு ¬முன் அர்க்யம் கொடு; இது, காணாமல் கொடு என்பதை குறிக்கும். கோணாமல் என்பது, சூரியன் தலைக்கு நேராக உள்ள உச்சி காலத்தில், அர்க்யம் கொடு என்பது.

அடுத்து, கண்டு கொடு என்பது, சூரியன் மறைவதற்கு ¬முன், மாலை வேளையில் அர்க்யம் கொடுக்க வேண்டும். இதை சிரத்தையுடன் செய்து வந்தால், ஆரோக்கியம், புண்ணியம் எல்லாம் கிடைக்கும்.

'காணாமல், கோணாமல், கண்டு கொடு...' என்பதற்கு, வேறு ஒரு விளக்கமும் உள்ளது. தர்மம் செய்யும் போது, அதை விளம்பரப்படுத்தாமல், யாருக்கும் தெரியாமல் கொடு; இது, காணாமல் கொடு என்பது.

கோணாமல் கொடு என்பது, தர்மம் செய்யும் போது, மனம் கோணாமல், ¬முழு மனதோடு கொடு என்பது. கண்டு கொடு என்பது, யாருக்கு என்ன தேவை என்று பார்த்து, ஸத் பாத்திரத்துக்கு கொடு என்பது. படிப்பில் ஆர்வமில்லாதவனுக்கு புத்தகமும், கல்யாண ஆசை இல்லாதவனுக்கு பெண்ணும், பசி இல்லாதவனுக்கு அறுசுவை உணவும் கொடுப்பது பயனற்றது.

அதனால், யாருக்கு, என்ன தேவை என்பதை அறிந்து, கொடுக்கச் சொன்னார்கள். தர்மம் செய்வதிலும் இத்தனை சூட்சமங்கள் உள்ளன. ஏதோ நானும் தர்மம் செய்து விட்டேன் என்று, பெருமைபட்டுக் கொள்வதில் பிரயோசனமில்லை.

இப்படியாக காணாமல், கோணாமல், கண்டு கொடு என்பதற்கு, சந்தியா வந்தனம் செய்வதிலும், தர்மம் செய்வதிலும் சில நியதிகள் உண்டு. இவைகளைத் தெரிந்து செய்வது நல்லது!

***

ஆன்மிக வினா-விடை!

பூஜை மேடையில் அம்பாளின் இரு பக்கங்களிலும் வைக்கப்படும் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதியை எந்த முறையில் வைக்க வேண்டும்?

அம்பாளின் வலது பக்கம் ஸ்ரீலட்சுமியும், இடது பக்கம் ஸ்ரீசரஸ்வதியும் இருக்க வேண்டும்.

***

- வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us