PUBLISHED ON : ஆக 25, 2013

அ நிறம் | அளவு
இன்றைய ரசிகர்களுக்கு, ஹாலிவுட் நடிகை சோபியா லாரன் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால், 1950ல், இத்தாலியை சேர்ந்த சோபியா, ஹாலிவுட்டுக்கு வந்து, பெரும் புகழ் பெற்றார். அக்கால சூப்பர் ஹீரோக்களான, மர்லன் பிரான்டோ, சால்ட்டன் ஹெஸ்டன் மற்றும் கிளார்க் காபில் போன்றோருடன் நடித்த சோபியா லாரன், இப்போது மீண்டும் நடிக்க வந்திருக் கிறார். இந்த நடிகைக்கு வயது இப்போது எவ்வளவு தெரியுமா? 78 தான்! இவர் மகனான, எட்வேர்டோ போன்றி இயக்கும் படத்தில் தான் நடிக்கிறார்.
— ஜோல்னாப் பையன்.
