/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
முடிக்கு பதிலாக நகம்; இப்படி ஒரு பரிதாபம்!
/
முடிக்கு பதிலாக நகம்; இப்படி ஒரு பரிதாபம்!
PUBLISHED ON : டிச 07, 2014

அமெரிக்காவைச் சேர்ந்த ஷான்யனா ஐசோம் என்ற 32 வயது பெண், 'இந்த உலகத்தில் எனக்கு ஏற்பட்ட துன்பம் போல், வேறு யாருக்கும் ஏற்பட கூடாது...' என, கண்ணீர் வடிக்கிறார். காரணம், இவருக்கு, கை, கால்களில் என முடி முளைக்கும் இடங்களில் எல்லாம், முடிக்கு பதிலாக நகங்கள் முளைத்துள்ளன. இது போதாதென்று, முகத்திலும் நகங்கள் வளர்ந்துள்ளன. எவ்வளவோ மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் அவர், 'ஐந்தாண்டுகளுக்கு முன், எனக்கு ஆஸ்துமா நோய் தாக்கியது. மருத்துவமனையில் வீரியம் நிறைந்த மருந்துகளை அதிகமாக கொடுத்து விட்டனர். இதில் ஏற்பட்ட விளைவு தான் இந்த நகங்கள். இதனால், என் வாழ்க்கையே நரகமாகி விட்டது...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.

