PUBLISHED ON : ஜூன் 18, 2017

அ நிறம் | அளவு
படத்திலுள்ள, இந்த பறவையின் பெயர், சுக்கர் பாட்ரிஜு; அழிந்து வரும் உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ள இப்பறவை ஒன்றின் விலை, 25 ஆயிரம் ரூபாய். இதை வாங்கவோ, விற்கவோ மற்றும் வீட்டில் வளர்க்கவோ கூடாது என்கிறது, சட்டம்.
பாகிஸ்தான் நாட்டு தேசிய பறவையான இதை, சிறிய கூண்டில் அடைத்தால், உடனே, சத்தம் எழுப்பி, தலையை அங்குமிங்கும் மோதி, தற்கொலை செய்து கொள்ளும். சமீபத்தில், கொச்சியை சேர்ந்த சுமி என்ற பெண், தன் வீட்டில், சுக்கர் பாட்ரிஜு பறவைகளை வளர்த்து, விற்று வந்ததால், கைது செய்யப்பட்டார்.
— ஜோல்னாபையன்
