sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சம்மர் விளையாட்டு!

/

சம்மர் விளையாட்டு!

சம்மர் விளையாட்டு!

சம்மர் விளையாட்டு!


PUBLISHED ON : மே 03, 2015

Google News

PUBLISHED ON : மே 03, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடல் நலத்திற்கும், அறிவுக் கூர்மைக்கும் சமூக ஒற்றுமையை வளர்க்கவும், உதவுவன நம் பாரம்பரிய விளையாட்டுக்கள். காலப்போக்கில் மற(றை)ந்து போன சில விளையாட்டுக்களை பற்றி பார்ப்போம்.

பாண்டி: இந்த விளையாட்டை இருவரோ அல்லது நால்வரோ விளையாடலாம். பெரிய செவ்வகம் வரைந்து, அதில் எட்டு கட்டங்களை பிரித்துக் கொள்ளவும். மண்பானையின் சில்லு தான் இதன் விளையாட்டுப் பொருள்.

முதலில், சில்லை ஒவ்வொரு கட்டமாக போட்டு நொண்டியபடியே, ஒரு காலால் அந்த சில்லை தட்டி, ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்கு தள்ள வேண்டும். நான்கு கட்டங்களையும் தாண்டியபின், கை, புறங்கை, கால் மற்றும் தலையில் சில்லை வைத்து கட்டங்களை தாண்ட வேண்டும். பின், செவ்வக கட்டத்திற்கு முதுகை திரும்பி நின்றபடி, ஏதாவது ஒரு கட்டத்தில், சில்லை வீச வேண்டும்.

சில்லு விழுந்த கட்டத்திலிருந்து அதை கட்டத்துக்கு வெளியே காலால் தள்ளி வெளிக் கொணர வேண்டும். அப்படி வெளியே கொண்டு வந்து விட்டால், அந்த கட்டத்துக்கு சொந்தக்காரராக மாறி, பழம் வைத்துக் கொள்ளலாம்.

எதிராளி விளையாடும் போது, அந்த கட்டத்தை மிதிக்காமல் தாண்டி செல்ல வேண்டும்.

இந்த விளையாட்டு கற்றுக் கொடுக்கும் பாடம்: சில்லை சரியாக கட்டத்தில் எறியும் போது, வெற்றி இலக்கை அடைய, எவ்வளவு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது.

பூப்பறிக்க வருகிறோம்!: இரு குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பர். ஒருவரோடு ஒருவர் கை கோர்த்தபடி, எதிரணியினரை நோக்கி குதித்தபடி, பாட்டுப்பாடி வருவர். இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும்.

பூப்பறிக்க வருகிறோம்... பூப்பறிக்க வருகிறோம்....

எந்த மாதம் வருகிறீர்... எந்த மாதம் வருகிறீர்...

டிசம்பர் மாதம் வருகிறோம்... டிசம்பர் மாதம் வருகிறோம்...

யாரைத் தேடி வருகிறீர்... யாரைத் தேடி வருகிறீர்...

பூவைத் தேடி வருகிறோம்... பூவைத் தேடி வருகிறோம்...

எந்தப் பூவை தேடுவீர்... எந்தப் பூவை தேடுவீர்...

மல்லிகையை தேடுவோம்...

- இப்படிப் பாடியதும், மல்லிகை என்று பெயர் வைத்த பெண்ணை பிடித்து இழுப்பர். அந்தப் பெண் எதிரணிக்கு சென்று விடாமல் இந்த அணி இழுக்க, ஒரே கலாட்டா தான்!

கயிறு துள்ளல்! (ஸ்கிப்பிங்): பெண்களுக்கு ஸ்கிப்பிங் ஆடுதல் மிகவும் முக்கியம். ஒரு விதத்தில் இது, உடல் எடையை குறைக்கவும், மேலும் எடை அதிகரித்து விடாமலிருக்கவும், பாதுகாப்பான பயிற்சியாக விளங்குகிறது. ஆண்களுக்கும் இவ்விளையாட்டு நல்லதுதான். ஸ்கிப்பிங் ஆடுவதால், பின்னங்கால்களின் தசைகள் வலுவடைகின்றன.

ஸ்கிப்பிங்கால் ஏற்படும் பலன்கள்:

*கை, கால் மற்றும் மூளை ஒருங்கிணைந்து செயல்படும் திறன், ரிப்ௌக்ஸ் ஆக் ஷன் மற்றும் சட்டென்று செயல்படும் திறன், ஸ்கிப்பிங் செய்வதால் விருத்தியடைகின்றன.

*இரண்டு பேர் சேர்ந்து ஒன்றாக கயிற்றைத் தாண்டும் போது, அடுத்தவருடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் ஏற்படுகிறது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்ற பல உடல் இயக்கங்களால் நல்ல பலன் ஏற்படுகிறது.

கிட்டிப்புள்!: தமிழரின் பழமையான விளையாட்டுகளில் ஒன்று, கிட்டிப்புள். பொதுவாக, சிறுவர்கள் மட்டுமே இவ்விளையாட்டை விளையாடுவர். இது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு பெயர்களுடன், 1970ம் ஆண்டு வரையில், விளையாடப்பட்டு வந்தது.

ஆட்ட அரங்காக, குதிகாலால் திருகிய குழி அல்லது ஒரு முழம் நீளத்தில் செய்யப்பட்ட குழி அமைக்கப்படும்.

குழியின் இரு முனையையும் ஒட்டியபடி கிடை மட்டமாக கிட்டிப்புள் வைக்கப்படும். இந்தப் புள்ளை கிட்டிக்கோலால் தட்டி விடுவர். இதற்கு, 'தெண்டுதல்' என்று பெயர்.

புள் பறக்கும் போது கிட்டிக் கோலால் அடிப்பர். புள் தொலைதூரம் செல்லும். எதிரில் உள்ளவர் அல்லது எதிரணியினர் பறந்து வரும் புள்ளைப் பிடிக்க வேண்டும். இவ்வாறு தடியால் (கிட்டிக்கோலால்) குழியிலிருந்து தெண்டி (கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டு.






      Dinamalar
      Follow us