/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்ப முடிகிறதா... இவருக்கு 95 வயதாம்!
/
நம்ப முடிகிறதா... இவருக்கு 95 வயதாம்!
PUBLISHED ON : செப் 13, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் இருப்பவரைப் பார்க்கும் போது, அதிகபட்சமாக, 50வயது இருக்கலாம் என்று தானே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், இவருக்கு, 95 வயது. துருக்கியைச் சேர்ந்த இவரின் பெயர் காசிம் குர்புஜ்; இவரது இளமையின் ரகசியம் யோகா பயிற்சி தான். 40வது வயதில் இருந்தே, தினமும், நான்கு மணி நேரம், கடுமையான யோகா பயிற்சி செய்து வருவதாக கூறும் இவர், 'யோகா பயிற்சியுடன், முறையான உணவு சாப்பிட்டால் அனைவருமே, 130 வயது வரை வாழலாம்; ஆனால், இதை யாரும் நம்ப மறுக்கின்றனர். என்னால், ஐந்து நிமிடங்களுக்கு மூச்சை அடக்க முடியும்...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.

