தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!

சம்மர் டிப்ஸ்!


PUBLISHED ON : மார் 15, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கோடையின்போது, இரவில் குளிர்ந்த நீரில் வெள்ளரிக்காய்களை நறுக்கிப்போட்டு, காலையில், அந்த நீரால் முகம் கழுவினால், புத்துணர்ச்சி கிடைக்கும்.

* சுண்டக் காய்ச்சிய பாலில், தேவையான சர்க்கரை சேர்த்து, ஆறியதும், அதில் மில்க் பிரெட் அல்லது ரஸ்க்கை ஊறப்போட்டு, மிக்சியில் ஒரு சுற்று சுற்றி, 'வெனிலா எசன்ஸ்' விட்டு, 'ப்ரீசரில்' வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து, மீண்டும் மிக்சியில் சுற்றி, 'ப்ரீசரில்' வைத்து எடுத்தால், திடீர் ஐஸ்கிரீம் தயார்.

* நுங்குகளை தோல் உரித்து, தேவைக்கேற்ப சர்க்கரை, பால், ஏலக்காய் கலந்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி, 'ப்ரிஜ்'ஜில் வைத்து எடுத்தால், சுவையான, சத்தான, 'ஜில்'லென்ற நுங்கு ஐஸ்கிரீம் தயார். உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

* பச்சை பயறு, துளசி, வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை வெயிலில் காய வைத்து, பொடித்து, தினமும் தேய்த்து குளித்தால், உடல் குளிர்ச்சியாகும்.

* நன்னாரி வேர்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, பானை நீரில் போட்டு, குறைந்தது, ஆறு மணி நேரம் நன்கு ஊறிய பின் பருகினால், வெப்பமே தெரியாது; உடல், 'குளுகுளு' என இருக்கும்.

* மோரில், வௌ்ளரிக்காய் துண்டுகள், கொத்தமல்லி, இஞ்சி, வெட்டி வேர் போட்டு, உச்சி வெயிலில் ஒரு டம்ளர் பருகினால், 'ஜில்'லென்று இருக்கும்.

* இளநீரில் இரண்டு நுங்குகளை நறுக்கி போட்டு, வெல்லம் சேர்த்து மிக்சியில் அடித்து பருகினால், கோடையில், 'ஜில்'லென இருக்கும்.

* தர்பூசணி சாறுடன், கிர்ணி பழ சாறு, பச்சை திராட்சை, செர்ரி கலந்து, 'ப்ரிஜ்'ஜில் ஒரு மணி நேரம் வைத்திருந்து பருகினால், குளிர்ச்சியோ குளிர்ச்சி தான்.

* துளசி, சந்தனம், வேம்பு மற்றும் மஞ்சள் இவற்றை நைசாக அரைத்து, உடம்பில் பூசி வந்தால், வேனல் கட்டிகள் ஆறும்; சருமம் மிருதுவாகும். வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு, கசகசாவை மிக்சியில் அரைத்து, பாலுடன் சேர்த்து, கொதிக்க வைத்து, துளி சர்க்கரை கலந்து பருகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us