தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/'சம்மர் டிப்ஸ்!'

'சம்மர் டிப்ஸ்!'

'சம்மர் டிப்ஸ்!'


PUBLISHED ON : மார் 22, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளிக்கும் நீரில், எலுமிச்சை பழ சாறு கலந்து குளித்தால், கோடையில் ஏற்படும் வியர்வை வாடை நீங்கும்; உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்

* தலையில், வியர்வை நாற்றம் அதிகம் வந்தால், வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி சீயக்காய் துாள், வெந்தய துாள் கலந்து குழைத்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தால், நாற்றம் போய்விடும்

*குளிர்ச்சியை தருகிறது, வெல்லம். கோடை காலத்தில் செய்யும் இனிப்புகளில், சர்க்கரைக்கு பதில் வெல்லம் கரைத்து, வடி கட்டி, சுக்கு பொடி, ஏலக்காய் பொடி கலந்தால், சுவையான, சத்தான பானகம் கிடைத்து விடும்

* வியர்குருவை போக்க, நுங்கு தோல், சந்தனம் இவற்றை அரைத்து பூசலாம்

* வெயில் காலங்களில், முல்தானிமிட்டி அல்லது சந்தனத்துடன், பன்னீர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் வராது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us