
* சுற்றுலாவின் போது, நீங்கள் யார் வீட்டுக்கு விருந்தாளியாக சென்று தங்குகிறீர்களோ, அவர்கள் குழந்தைகளின் பிறந்த நாள் மற்றும் பெற்றோரின் திருமண நாள் வந்தால், வாழ்த்துக்களோடு, அவரவருக்கு ஏற்ற பரிசு பொருட்களை கொடுத்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
* தினசரி மருந்து மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள், வெளியூர் பயணத்திற்கு முன், மருந்து - மாத்திரைகளுடன், அதன் ரசீதையும் உடன் எடுத்து செல்வது நல்லது.
* வாடகை வாகனத்தில் செல்லும்போது, சாப்பிடும் இடத்தில், டிரைவருக்கும், காபி, டீ, டிபன் மற்றும் சாப்பாடு வாங்கி கொடுத்தால், மன நிறைவுடன் வாகனம் ஓட்டுவார்.
* பயணத்தின் போது, வீட்டு முகவரி, தொலைபேசி எண்களை ஓர் தாளில் எழுதி, குழந்தைகளின் சட்டை பையில் வைத்திடுங்கள்; புது இடங்களில் அவர்கள் தொலைந்தாலும் கண்டுபிடிப்பது சுலபம்.
* பயணத்தின் போது, மொத்த துணிகளையும் ஒரே பெட்டியில் அடைக்காமல், சிறு சிறு, 'பேக்கிங்'காக செய்து கொண்டால், ஆளுக்கொன்றை சுலபமாக எடுத்துச் செல்லலாம்; பயணமும் சுகமாகும்.