PUBLISHED ON : மார் 27, 2011

அ நிறம் | அளவு
'சப்வே' என்ற பெயரில், பெரிய நகரங்களில் அதிநவீன ரெஸ்டாரன்டுகள் இயங்குவதைப் பார்த்திருப்பீர்கள். இதே போன்று மெக்டொனால்ட், கே.எப்.சி., என்ற ரெஸ்டாரன்டுகளும் உலகம் முழுவதும் எல்லா நகரங்களிலும் இயங்குகின்றன. மெக்டொனால்ட் ரெஸ்டாரன்டுகளை விட, சப்வே ரெஸ்டாரன்டுகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
கடந்த, 2010ம் ஆண்டு நிலவரப்படி, உலகம் முழுவதும், 33 ஆயிரத்து, 749 சப்வே கடைகள் உள்ளன. கடந்த, 1965ம் ஆண்டு, 4 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டுடன் பிரட் டிலுகா என்பவரால் அமெரிக்காவில் சப்வே ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கப் பட்டது. இன்று, இந்தியா உட்பட உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் இந்த ரெஸ்டாரன்டிற்கு கிளைகள் உள்ளன.
— ஜோல்னா பையன்.
