
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயதாகி விட்டதே என்று முடங்கி கிடப்பவர் ஏராளம். ஆனால், சிலரோ வயதை பற்றி கவலைப்படாமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஆச்சர்யப்படுத்துகின்றனர்.
அரசு மருத்துவமனை நர்சிங் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்ற புஷ்கலா என்ற பெண்மணி, 62வது வயதில், இந்தியா முழுக்க சுற்றிப் பார்க்க விரும்பினர். வனவிலங்கு புகைப்பட கலைஞரான இவரது கணவர், வயது, 69. தன் ஜிப்ஸி வண்டியை எடுத்துக் கொண்டு மனைவியுடன் புறப்பட்டார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, பல மாநிலங்களை கடந்து, பல ஆயிரம் கி.மீ., பயணித்து, காஷ்மீரை அடைந்தனர். தற்சமயம், வீடு திரும்பிய இந்த தம்பதியினர், மேலும், பல ஊர்களுக்கு சுற்றுலா சென்று, அசத்தப் போவதாக கூறுகின்றனர்.
— ஜோல்னாபையன்