தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தமிழா....தமிழா ! - கவிதைச் சோலை

தமிழா....தமிழா ! - கவிதைச் சோலை

தமிழா....தமிழா ! - கவிதைச் சோலை


PUBLISHED ON : டிச 05, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 05, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*  நெஞ்சு கொதிக்குதடா...

விந்தையை எண்ணிச் சிரிக்குதடா...

*  தமிழே, தாயென முழங்கிடுவர்...

தமிழ் அரசன் நானென முரசொலிப்பர்...

தமிழ் என் மூச்சென முட்டிடுவர்...

தமிழனை மட்டும் மறந்திருப்பர்!

*  தமிழுக்கென் முழு வாழ்வென்பர்...

தமிழ் வாழவும் உயிர் விடுவோமென்பர்...

தமிழின ரத்தம் கொதிக்குதென்பர்...

தலைநகரத்தில் இந்தியில் பேசிடுவர்!

*  தமிழுக்காய் என் உழைப்பென்பர்...

தமிழ்ப் போர் தொடுக்க அழைத்திடுவர்...

தமிழ் உரைக்கா நா இனி எதற்கென்பர்...

தம் பிள்ளையை கான்வென்ட்டில் சேர்த்திருப்பர்!

*  தமிழ் மானம் காக்க மோதிடுவர்...

தமிழினத்திற்காக வாதிடுவர்...

தமிழ்ப் பேரரசன் இனி அவரென்பர்...

இல்லத்தில் தெலுங்கு பேசிடுவர்!

*  இத்தனை வசனங்கள்...

எத்தனை ஆண்டுகள்...

இன்னுமிங்கே பார்த்திருப்பீர்...

தமிழ் மானம், வீரம், ஈரம்...

என்போரைக் கண்டால், கேட்டால்...

இப்போதேனும்... புரிந்திடுவீர்!

— ச.பிரசன்னா,  சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us