/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தீவிரவாதிகளின், 'ஹிட் லிஸ்ட்'டில் தஸ்லிமா!
/
தீவிரவாதிகளின், 'ஹிட் லிஸ்ட்'டில் தஸ்லிமா!
PUBLISHED ON : மே 01, 2016

வங்க தேசத்தை சேர்ந்த எழுத்தாளர், தஸ்லிமா நஸ் ரீன், 'பெண்களுக்கும், ஆண்களைப் போன்ற சுதந்திரம் வேண்டும்...' என்ற கருத்தை, தன் கதைகளில் வலியுறுத்தியதால், 21 ஆண்டுகளுக்கு முன், நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவருடைய பெற்றோர் இறந்த போது கூட, இறுதியாக, அவர்களது உடல்களை காண, அந்நாட்டு அரசு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
தற்சமயம், இந்தியாவில் தங்கியுள்ள இவருக்கு, தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு அதிகாரிகளுடன் தான் எங்கும் செல்வார். சமீபத்தில், விழா ஒன்றில் பங்கேற்க, கோழிக்கோடு வந்தபோது, செய்தியாளர்களிடம், 'மத தீவிரவாதத்துக்கு பயந்து, என் கருத்துகளில் இருந்து விலக மாட்டேன்...' என்று கூறினார்.
— ஜோல்னா பையன்.

