PUBLISHED ON : நவ 27, 2016

அ நிறம் | அளவு
நம் அமைச்சர்களின் வீடுகளில், டீ, சமோசா மற்றும் குலாப்ஜாமூன் கொடுக்க, எவ்வளவு செலவு ஆகும் என்று நினைக்கிறீர்கள்... அதிகமில்லை, ஒன்பது கோடி ரூபாய் தானுங்க! இந்த வியக்க வைக்கும் கணக்கை கூறியிருப்பவர், உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்! மார்ச், 15, 2012லிருந்து, மார்ச், 15, 2016 வரை உள்ள நான்கு ஆண்டுகளில், இவரது அமைச்சர்கள் டீ குடித்த செலவு தான், ஒன்பது கோடி! வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை கவனிப்பது, குடும்பத் தலைவியின் கடமை என்பதாலோ என்னவோ, பெண் அமைச்சர் அருண்குமார் கோரி, 23 லட்ச ரூபாய் செலவழித்துள்ளார்.நம் ஜனநாயகம், எப்படி எல்லாம் செயல்படுகிறது பாருங்கள்!
— ஜோல்னாபையன்.
