PUBLISHED ON : மார் 18, 2018

அ நிறம் | அளவு
வெங்காயத்துக்கும், கண்ணீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வெங்காயத்தை உரித்ததுமே, அதை உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர்களின், கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியாது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கண்ணீர் வராத, மரபணு மாற்றப்பட்ட வெங்காயத்தை கண்டு பிடித்துள்ளனர், அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
பார்ப்பதற்கு சாதாரண வெங்காயம் போல் தோன்றும்; ஆனால், எவ்வளவு உரித்தாலும், கண்ணீர் வராது. மற்றபடி, சுவை மற்றும் காரம் எல்லாம் வழக்கம் போலவே இருக்கும்.
'சுனியன்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த வெங்காயம், அமெரிக்க சந்தைகளில் இப்போது பரவலாக விற்பனைக்கு வந்துள்ளது. நம் வீட்டு சமையல் அறைக்கும், விரைவில் வரக் கூடும்!
—ஜோல்னாபையன்.
