PUBLISHED ON : நவ 09, 2014

அ நிறம் | அளவு
கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த, முக்தபார் டோரெவா என்ற, 65 வயது பெண்ணுக்கு, நீண்ட தாடி வளர்ந்துள்ளது. இவரை முதல் முறையாக பார்க்கும் யாருக்குமே, ஆண் என்று தான் நினைக்க தோன்றும். 'என்னுடைய ௨௫வது வயதிலேயே தாடி வளர்க்கத் துவங்கி விட்டேன்; என் வீட்டுக்காரருக்கு, இந்த தாடி ரொம்ப பிடிக்கும். எங்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இந்த தாடி தான் முக்கிய காரணம். இப்போது எனக்கு, ஆறு பேர குழந்தைகள் உள்ளனர். இந்த தாடி காரணமாக, கஜகஸ்தானில் பிரபலமாகி விட்டேன். ஏராளமான ரசிகர்களும் உருவாகி விட்டனர்; வெளியில் செல்லும்போது, என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்...' என, தாடியை வருடியபடியே கூறுகிறார், முக்தபார்.
— ஜோல்னாபையன்.
