PUBLISHED ON : ஜூன் 12, 2011

அ நிறம் | அளவு
எப்போதும் புன்னகையுடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரே இடத்தில், நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து சிரித்தால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்ச்சி, குரேஷிய நாட்டின் தலைநகர் சாகர்ப் நகரில், மே மாதம் நடந்தது. நகரின் மையப் பகுதியில் கூடிய, 768 பேர், ஒரே நேரத்தில் சிரித்தனர். அவர்கள் மனித தலை போல் வட்டமாக நின்று, சிரித்தபடி போஸ் கொடுத்தனர். உயரமான கட்டடத்தில் இருந்து பார்த்த போது, மிகப்பெரிய பொம்மை ஒன்று சிரிப்பது போல் தோன்றியது. 'மிகப்பெரிய மனித சிரிப்பு' என, இந்த சாதனையை உலக கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது.
— ஜோல்னா பையன்.
