PUBLISHED ON : ஜூலை 05, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் உள்ளவர் பெயர் முகமது ஸ்லாகி. தற்போது, 44 வயதான இவர், 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். இவரை, அல்கொய்தா தீவிரவாதி என தவறாக நினைத்து கைது செய்து, ஜோர்டன், ஆப்கன் மற்றும் கியூபா க்வாண்டானாமோ சிறைச்சாலைகளில் சிறை வைத்தனர்.
தற்சமயம் விடுதலையாகியுள்ள இவர், தான் சிறையில் அனுபவித்த கொடுமைகளை பற்றி, எழுதியுள்ள புத்தகம், 13 நாடுகளில் வெளியாகி, அமோகமாக விற்பனை ஆகியுள்ளன.
கடும் குளிர் நிறைந்த அறையில் நிர்வாணமாக இருக்க வைத்தும், தாகத்திற்கு உப்பு தண்ணீர் குடிக்க வைத்து கொடுமைப் படுத்தியதாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
— ஜோல்னா பையன்.

