தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மாமிச மலையை பராமரிக்க செலவு செய்யும் அரசாங்கம்!

மாமிச மலையை பராமரிக்க செலவு செய்யும் அரசாங்கம்!

மாமிச மலையை பராமரிக்க செலவு செய்யும் அரசாங்கம்!


PUBLISHED ON : ஏப் 01, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகிலேயே அதிக எடையுடைய நபர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்றுள்ளார், பிரிட்டனை சேர்ந்த கெய்த் மார்ட்டின். 42 வயதான இவரது எடை, 368 கிலோ. இவரால் எழுந்து நடமாட முடியாது. கடந்த பத்தாண்டுகளாக படுக்கையில் இருக்கிறார். இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இவரை பராமரிப்பதற்காக, பிரிட்டன் அரசு, ஆண்டுதோறும் கணிசமான நிதியை செலவிடுகிறது. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நான்கு நர்சுகள், வாரத்துக்கு மூன்று முறை, இவரது வீட்டுக்கு வந்து, இவரை சுத்தம் செய்து, உடல் நலத்தை கண்காணிக்கின்றனர். இவர்களுக்கான சம்பளம், பிரிட்டன் அரசால் தரப்படுகிறது.

நாளுக்கு நாள், உடல் எடை பெருத்துக் கொண்டே சென்றாலும், வாய்க்கு கடிவாளம் போட மறுத்து, தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார் மார்ட்டின். சாண்ட்விச், பிரட், சாக்லேட், கேக், இறைச்சி என, கையில் கிடைப்பதை எல்லாம், வாய்க்குள் தள்ளி விடுகிறார். 'இவரை பராமரிப்பதற்கு, எதற்கு அரசு பணத்தை செலவிடுகிறீர்கள்...' என, பிரிட்டனில் சிலர் குரல் எழுப்ப துவங்கியுள்ளனர். ஆனாலும், மனிதாபிமான அடிப்படையில், இவருக்கான உதவியை தொடர்ந்து செய்யப் போவதாக, பிரிட்டன் அரசு உறுதியளித்துள்ளது.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us