PUBLISHED ON : ஆக 31, 2014

அ நிறம் | அளவு
திரைப்படங்களில் நடித்ததன் மூலம், அதிகம் சம்பாதித்த நடிகை என்ற பெயரை, ஹாலிவுட்டின் அழகுப் புயல் சாண்ட்ரா புல்லக் தட்டிச் சென்றுள்ளார். கடந்தாண்டில் மட்டும், 3,118 கோடி ரூபாயை, இவர் சம்பாதித்துள்ளதாக, 'போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஏழு ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற, 'கிராவிட்டி' படத்தில் நடித்தது தான், சாண்ட்ராவின் புகழுக்கு காரணமாம். இத்தனைக்கும் சாண்ட்ராவுக்கு, 50 வயதாகி விட்டது. கடந்த, 2012ல், அதிகம் சம்பாதித்த நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஏஞ்சலினா ஜோலி, கடந்தாண்டில், ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
—ஜோல்னாபையன்.
