தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பச்சை குத்திக் கொள்வதில் மன்னன்.... பெக்கம்!

பச்சை குத்திக் கொள்வதில் மன்னன்.... பெக்கம்!

பச்சை குத்திக் கொள்வதில் மன்னன்.... பெக்கம்!


PUBLISHED ON : நவ 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்கம், தன் உடலில் மொத்தம், 17 விதமான பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

லேட்டஸ்ட்டாக கருப்பு வெள்ளையில் இயேசுவை, மூன்று குழந்தைகள் தூக்கியுள்ளது போல் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். வயதானால், தன்னை தன் குழந்தைகள் தான் பாதுகாக்க வேண்டும் என்பதை சிம்பாலிக்காக காட்டத்தான் இப்படி பச்சை குத்தி கொண்டுள்ளதாக கூறுகிறார். மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர்.

தன் மனைவி விக்டோரியாவின் பெயரை ஆங்கிலத்தில் குத்தாமல், இந்தியில் பச்சை குத்தியுள்ளார். ஆங்கிலத்தில், விக்டோரியா என்றால், அது இங்கிலாந்தின் முன்னாள் ராணியைத்தான் குறிக்கும். அதை தவிர்க்கத்தான், இப்படி குத்தியுள்ளதாக கூறுகிறார்.

விக்டோரியாவை மணந்து கொண்ட தேதி மற்றும் நாளையும், தன் கையில் பச்சை குத்தியுள்ளார்.

வலது மற்றும் இடது தோள்களில் தேவதையும், மற்றொரு இடத்தில், 'நான் அன்பிற்குரியவன்; என்னை சார்ந்தவர்கள் என் அன்பிற்குரியவர்கள்' என்ற பைபிள் வார்த்தைகளை, ஹீப்ரூ மொழியில் பச்சை குத்தியுள்ளார்.

சரி... இந்த பச்சைக் குத்தல்கள் எதற்கு எனக் கேட்டால், 'என்னைச் சார்ந்தவர்கள், என்னை வளமூட்டியவர்களை பச்சை குத்தியுள்ளேன். என் மனைவியும், குழந்தைகளும் எப்போதும் என்னுடன் இருப்பதையே விரும்புகிறேன். அவர்கள் என்னுள் இருக்கின்றனர் என்பதை காட்டத்தான் பச்சை குத்தியுள்ளேன்...' என்கிறார்.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us