தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உலகின் நீளமான பஸ்!

உலகின் நீளமான பஸ்!

உலகின் நீளமான பஸ்!


PUBLISHED ON : ஏப் 24, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டு பஸ்கள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள நீளமான பஸ்களை பார்த்திருப்பீர்கள். பெரிய நகரங்களில், அகலமான, நீளமான சாலைகளில் தான் அந்த பஸ்களையே இயக்க முடியும். அதேபோல், மூன்று பஸ்களை இணைத்து பெரிய பஸ் ஒன்றை உருவாக்க முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளது பிரபல வால்வோ வாகன தயாரிப்பு நிறுவனம்.

படத்தில் காணப்படும் இந்த பஸ்தான் உலகின் நீளமான பஸ். பிரேசில் நாட்டில் உள்ள வால்வோ நிறுவனம், 92 அடி நீளம், 8.5 அடி அகலம் கொண்ட பிரமாண்ட பஸ்சை உருவாக்கியுள்ளது. நகர பஸ் சர்வீசில் இயங்க இருக்கும் இந்த பஸ்சில், ஒரே நேரத்தில், 250 பயணிகள் பயணிக்கலாம். சோயா பீன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் பயோடீசல் எரிபொருளில் இந்த பஸ் இயங்கும். பிரேசில் நாட்டில், குரிதிபா நகரில் இந்த பஸ் வலம் வருகிறது.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us