தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து - ஜாதிக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து - ஜாதிக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து - ஜாதிக்காய்!


PUBLISHED ON : நவ 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்களுடைய வளர்ச்சிதை மாற்றம் பலவீனமாக இருந்தால், ஜாதிக்காயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* ஜாதிக்காய் எனும் ஆயுர்வேத மூலிகையில், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

* ஜாதிக்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு உடலில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரைப்பை பிரச்னைகள், அசிடிட்டி, வாயு போன்ற பிரச்னைகளை தடுக்கிறது. வயிற்றுப்போக்கு பிரச்னையிலிருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது

* ஜாதிக்காயில் வலியை குறைக்கும் திறன், அஜீரணத்தை எளிதாக்குதல், ரத்த ஓட்டம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், வாய் வழி பிரச்னைகளை நீக்குதல், அறிவாற்றல் செயல்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் போன்ற ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன

* சூடான ஒரு கப் பாலில், இரண்டு சிட்டிகை ஜாதிக்காய் பொடி மற்றும் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து குடிக்கலாம். இந்த கலவையானது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன், துாக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும்.இருப்பினும், இதை அளவோடு எடுத்து பயன்பெறுங்கள்.



— பி. பாலாஜி கணேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us