PUBLISHED ON : ஜன 31, 2016

அ நிறம் | அளவு
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த, ஒரு நிறுவனம், ஸ்மார்ட் போன் மூலம் இயங்கும், 'ஸ்மார்ட் சூட்கேசை' தயாரித்துள்ளது. தொலை தூர பயணங்களுக்கு செல்லும்போது, இந்த சூட்கேசை, தூக்கிச் செல்லவோ, இழுத்துச் செல்லவோ வேண்டியது இல்லை. ஸ்மார்ட் போனில் உள்ள, 'ஆப்' வசதியை, பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள, 'பாலோ' என்ற பட்டனை அழுத்தினால் போதும்; அந்த சூட்கேஸ், நாய்க்குட்டி போல், நாம் செல்லும் இடத்துக்கெல்லாம், நம் பின்னாடியே வரும். இந்த சூட்கேஸ் இயக்கத்துக்காக கேமரா சென்சார் தொழில்நுட்பம், பயன்படுத்தப்பட்டுள்ளது.
— ஜோல்னாபையன்.
