PUBLISHED ON : மார் 05, 2017

பாலஸ்தீனம் மற்றும் கசா போன்ற இடங்களில், எப்போதும் குண்டு மழை பொழிந்து வருவதால், இங்குள்ள கட்டடங்கள், மளமளவென சரிந்து வருகின்றன. உடைந்த கட்டடங்களை புதுப்பிப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. காரணம், உடைந்த கற்கள் எதற்கும் பயன்படாமல், குவிந்து கிடப்பது தான்.
இந்நிலையில், இளம் பொறியாளர்களான, மாஜித் அல் மஷரவி மற்றும் ரவான் அப்துல்லத்தீப் ஆகிய இரு பெண்களும், இதற்கு, ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர்.
அது, இடிந்து விழுந்த கட்டடங்களில் இருந்து சேகரித்த கட்டைகள் மற்றும் சிமென்ட் கலவையின் காய்ந்த வடிவம், இவற்றையெல்லாம் அரைத்து, சில ரசாயன கலவைகள் சேர்த்து, சிறப்பு கட்டைகளாக உருவாக்கி, சாதனை படைத்துள்ளனர். இதற்கு, 'க்ரீன் கேக்' என்று பெயர் சூட்டியுள்ளனர். சாதாரண கட்டைகளை விட, பாதி எடை கொண்ட இதை, ஆறு மாதங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, கண்டுபிடித்துள்ளனர்.
— ஜோல்னாபையன்.
