தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/10 பைசா தர மறுத்த பாடகர்!

10 பைசா தர மறுத்த பாடகர்!

10 பைசா தர மறுத்த பாடகர்!


PUBLISHED ON : ஜன 02, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சினிமா பாடலாசிரியரும், கண்ணதாசனின் நெருங்கிய நண்பரும் ஆன வயலார் ராமவர்மா, இறந்தபோது, அவர் வயது: 47. பாடகராக ஜேசுதாஸ் அறிமுகமாகி பாடிய பாடல்கள் அனைத்தையும் எழுதியவர், வயலார் தான். ஆனால், நன்றி உணர்வில் கஞ்சத்தனம் காட்டும் பாடகர் என்பதை, வயலார் விஷயத்தில் நிரூபித்து விட்டார், ஜேசுதாஸ்.

குடிப்பழக்கத்தால் உடல் நலம் பாதித்து, ரத்த வாந்தி எடுத்தபோதிலும், செய்தியாளரிடம் சிகரெட் பாக்கெட்டை கொடுத்து, 'இதை பத்திரமாக வைத்து, நான் குணமாகி திரும்பும்போது தந்து விடு...' என்றார், வயலார். ஆனால், அவர் உயிருடன் திரும்பவில்லை. அந்த சிகரெட் பாக்கெட்டை, தன் மரணம் வரை பாதுகாத்து வந்தார், அந்த செய்தியாளர்.

வயலாருக்கு நினைவு மண்டபம் அமைக்க, அன்றைய முதல்வர் அச்சுதமேனன் தலைமையில், 5 லட்சம் ரூபாய் வசூலிக்க திட்டம் போட்டனர். ஆனால், 20 லட்சம் அள்ளி வழங்கினர், அவரது ரசிகர்கள்.

நிதி உதவி கேட்டு, ஜேசுதாஸை அணுகிய போது, 'கள்ளு குடிச்சு செத்தவருக்கெல்லாம்,

10 பைசா தர மாட்டேன்...' என்று கூறிவிட்டார்!

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us