PUBLISHED ON : நவ 11, 2012

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர், டெர்ரி கிரகாம். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மார்பில் ஏற்பட்ட நோய் காரணமாக, இராண்டாவது கைக் குழந்தைக்கு, இவரால் தாய்ப்பால் ஊட்ட முடியவில்லை. அந்த ஏக்கம் அவரது மனதில் ஆறாத புண்ணாக இருந்தது.
இந்த ஏக்கத்தை போக்கி கொள்வதற்காக, தன் மூத்த மகள் வளர்க்கும்,'ஸ்பைடர்' என, பெயரிடப்பட்டுள்ள நாய்க்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தாய்ப்பால் ஊட்டி வருகிறார், டெர்ரி. இதுகுறித்த செய்திகள், அமெரிக்க பத்திரிகைகளில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'நாய் குட்டிக்கு தாய்ப்பால் கொடுக்க முன் வந்தது எப்படி?' என்பது குறித்து, அவரிடம் கேட்டபோது, 'ஒரு நாள், என்னுடைய குழந்தைக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த புட்டி பாலை, மறதியாக கீழே வைத்து விட்டேன். எங்கள் ஸ்பைடர், அந்த பாட்டிலை கீழே உருட்டி, அதிலிருந்து கொட்டிய பாலை, குடித்தது. இதைப் பார்த்ததும், ஸ்பைடருக்கு தாய்ப்பால் கொடுக்கும் எண்ணம் வந்தது. இப்போது, ஒரு தாய்மையின் அனுபவத்தை முழுவதுமாக <உணர முடிகிறது' என, சந்தோஷத்துடன் கூறுகிறார், டெர்ரி.
— ஜோல்னா பையன்.
