தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உடல் முழுவதும் பச்சை குத்திய அதிசய மனிதர்!

உடல் முழுவதும் பச்சை குத்திய அதிசய மனிதர்!

உடல் முழுவதும் பச்சை குத்திய அதிசய மனிதர்!


PUBLISHED ON : மே 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகம் முழுவதும் உள்ள, 305 நாடுகளின் தேசிய கொடிகளை தன் உடலில் பச்சை குத்தி காட்சியளிக்கிறார் அதிசய மனிதர் ஒருவர்.

இந்த அதிசய நபரின் பெயர்: ஹர் பிரகாஷ்; வயது 70. இவரது சொந்த ஊர்: புது டில்லி. ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை சிறிய அளவில் நடத்தி வருகிறார். 'கின்னஸ் ரிஷி' என்று இவருக்கு இன்னொரு பட்டப்பெயர் உண்டு. காரணம், ஏதாவது சாதனை செய்து, கின்னஸ் புத்தகத்தில் வருடம் தோறும் இடம் பெறுவது இவரது வழக்கம். இப்போது, கின்னஸ் புத்தகத்தில் மீண்டும் இடம் பெற நூதன சாதனை ஒன்றை மேற்கொண்டுள்ளார். உடல் முழுவதும் பல நாடுகளின் தேசிய கொடியை, பச்சை குத்திக் கொள்வதுதான் அந்த சாதனை. அதற்காக ஹர் பிரகாஷ் இப்போது, நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் முகாமிட்டுள்ளார்.

இந்த சாதனை முயற்சி குறித்து ஹர் பிரகாஷ் கூறியதாவது:

என்னை எல்லாரும் ஜோக்கர், பைத்தியக்காரன் என்றெல்லாம் கூறுகின்றனர்; அதனால், நான் கவலைப்படவில்லை. இப்போது என் உடலில், 305 நாடுகளின் தேசிய கொடிகளை பச்சை குத்தியுள்ளேன். 185 நாடுகளின் வரைபடம், 165 சிறிய கொடிகள், 2,985 எழுத்துக்கள் என் உடலில் பச்சையாக குத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பல முறை சுற்றி வர ஆசைப்படுகிறேன். அந்த நாடுகளில் உள்ள குழந்தை கள் எல்லாரும், என்னிடம் வந்து, 'எங்கள் நாட்டு கொடி உங்கள் உடலில் எங்கே இருக்கிறது?' என கேட்டு, தேடிப் பார்க்க வேண்டும். அதன் மூலம் இந்தியாவைப் பற்றியும், என்னைப் பற்றியும் அவர்கள் தெரிந்து கொள்வர்.

லோகேஷ் வர்மா என்பவர்தான் எனக்கு இதில் முன்னோடி. அவர், தன் நெற்றியில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சைப்ரஸ், கனடா, இந்திய காங்கிரஸ் கட்சி கொடி ஆகியவற்றை பச்சை குத்தியிருந்தார். அதனைப் பார்த்த பின் தான், நான் என் உடல் முழுவதும் எல்லா நாடுகளின் கொடிகளையும் பச்சை குத்த ஆரம்பித்தேன். எனினும், இந்த சாதனையை என் மனைவியும், மகன்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பிரகாஷின் நெற்றி, தலை, கை, கால்கள், மார்பு ஆகிய இடங்களில் பச்சை குத்தப்பட்டுள்ளன. எனினும், அவர் முதுகுப்பகுதி வெற்றிடமாக உள்ளது. என் கனவுத் திட்டத்திற்காக அந்த இடம் வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. பச்சை குத்தி, சாதனை படைத்தவர்கள் அனைவரது பெயரையும் என் முதுகில் பச்சையாக குத்தப் போகிறேன்.

— இவ்வாறு ஹர் பிரகாஷ் கூறியுள்ளார்.

இப்படியும் ஒருவர் இருப்பாரா என, இவரைப் பார்த்தவர்கள் வியப்படைகின்றனர்.

***

து.மணிசேகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us