PUBLISHED ON : செப் 21, 2014

அ நிறம் | அளவு
தென் அமெரிக்க நாடான சிலியில், யாராலும் திருட முடியாத சைக்ளகிள் ஒன்றை, இங்குள்ள இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சைக்கிளுக்கு, பிரத்யேகமாக பூட்டு எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, சைக்கிளில் உள்ள பிரேம்களே, பூட்டாக பயன்படுகின்றன. சைக்கிள் சீட்டின் அடியில் உள்ள பிரேமை அலேக்காக கழற்றி, அருகில் உள்ள மரம் அல்லது மின் கம்பத்தில் இணைத்து, பூட்டி விடலாம். திருடர்கள் இந்த பிரேமை உடைத்து, சைக்கிளை எடுத்தாலும் பயன் இல்லை. ஏனெனில், பிரேமை உடைத்தபின், இந்த சைக்கிளை பயன்படுத்த முடியாது; காயலான் கடையில் தான் போட முடியும்.
— ஜோல்னாபையன்.
