தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!


PUBLISHED ON : பிப் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாலிவுட் ரீ - மேக்கில் அஜித்!

அஜித்தை வைத்து, பில்லா - 2 மற்றும் கமல் நடிப்பில் வெளியான, உன்னைப் போல் ஒருவன் படங்களை இயக்கியவர், சக்ரி டோலட்டி. சமீபத்தில், இவர் அஜித்தை சந்தித்து, ஹாலிவுட்டில் வெளியான, 24 கிராம் என்ற ஆங்கில படத்தை தழுவி, ஒரு கதை கூறியுள்ளார். அபாயகரமான விபத்து பற்றி கூறும் இக்கதையில் நடிக்க, அஜித்தும் விருப்பம் தெரிவித்துள்ளார். இப்படம், ஹாலிவுட்டுக்கு இணையான பட்ஜெட்டில், பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளது.

— சினிமா பொன்னையா

அஜித் - விஜய் ரசிகராக நடிக்கும் மலையாள நடிகர்கள்!

விஜய்க்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால், தற்போது, ஒரு படத்தில் விஜய்யின் ரசிகராக, அவரது கட் - அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது போல் நடிக்கிறார் மலையாள நடிகர் பிருத்விராஜ். அதேபோன்று, தனுஷின், சீடன் படத்தில் நடித்த மலையாள நடிகரான உன்னி முகுந்தன், இப்போது, அஜித்தின் ரசிகராக, ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார். இவர் அஜித்தை, தன், ரோல் மாடல் ஆக கொண்டு, படங்களில் நடித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

— சி.பொ.,

நீலாம்பரியாக மாறும் த்ரிஷா!

ரஜினி நடித்த, படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி வேடம், இப்போது வரை பேசப்பட்டு வருகிறது. அதன்பின், அதே ரம்யாகிருஷ்ணனுக்கு கூட, அம்மாதிரி வேடம் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது த்ரிஷாவுக்கு, தனுஷுடன் நடிக்கும், கொடி படத்தில் அதேபோன்ற, அதிரடியான வில்லி வேடம் கிடைத்துள்ளது. படையப்பாவில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன் எப்படி மோதினாரோ, அதற்கும் மேலாக, கொடி படத்தில், தனுஷுடன் வரிந்து கட்டி, மோதுகிறார் த்ரிஷா. இதையடுத்து, வித்தியாசமான நெகடிவ் கதாபாத்திரங்களில் நடிப்பதிலும், ஆர்வம் காட்டப் போவதாக சொல்கிறார் த்ரிஷா அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை!

— எலீசா

அகோரியாக நடிக்கும் நமீதா!

பரத் நடிக்கும், பொட்டு படத்தில், அகோரி வேடத்தில் நடிக்கும் நமீதா, 'இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்த எனக்கு, இது மாறுதலாக உள்ளது. அதோடு, இவ்வேடத்தில் நடிப்பதற்காக, 'மேக் - அப்' மூலம், உடலை கறுப்பாக மாற்றியுள்ளேன்...' என்று கூறியுள்ளார். மேலும், 'இனி வரும் படங்களிலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ப, என்னை மாற்றிக் கொள்ள தயாராகி விட்டேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

தாரா நடிகையின் மார்க்கெட் எகிறி நிற்பதால், அவருக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் இயக்குனர்கள். இவ்வகையில், மச்சி நடிகர் நடித்துள்ள நான்கெழுத்து படத்தில், அவருக்கே பாடம் புகட்டும் லீடு ரோலில், மேற்படி நடிகை நடித்துள்ளார். இதனால், நடிகையின் மார்க்கெட் கருதி, 'அவருக்கு முன், நாம் ஒரு டம்மி பீஸ் போன்று நடித்து விட்டோமே...' என்று பீல் செய்கிறார் நடிகர்.

வில்லனாக நடித்து, தேசிய விருது பெற்ற சிம்ஹா நடிகர், நாயகனாக நடித்த எந்த படமும் ஓடவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்திருக்கும் நடிகர், சமீபத்தில், பிரமாண்டமான பரிகார பூஜை நடத்தினார். இதில், அவருக்கும், அவரது வருங்கால மனைவியான மேனன் நடிகைக்கும் சேர்த்து, தோஷ பரிகாரமும் செய்யப்பட்டது.

சினி துளிகள்!

* ஜனனமான நடிகையுடன் காதல் வளர்த்து வந்த ஈட்டி நடிகர், இப்போது, வேறு ஒரு நடிகையின் மீது காதல் கொண்டுள்ளார். இப்படி நடிகர் ட்ராக் மாறிய விஷயத்தை கேள்விப்பட்ட ஜனன நடிகை, 'நான் மட்டும் என்ன சளைத்தவளா...' என்று சொல்லி, கேரளாவில் முகாமிட்டிருப்பவர், அங்கு வளர்ந்து வரும் கதாநாயகன் ஒருவருக்கு காதல் வலை வீசி வருகிறார்.

* போக்கிரி ராஜா படத்தை தொடர்ந்து, மீண்டும் ரஜினி டைட்டில்களில் நடிக்க, கதை கேட்டு வருகிறார் ஜீவா.

* தெகிடி மற்றும் பாகன் படங்களுக்கு பின், மலையாளத்தில் பிசியான நடிகையாகி விட்டார் ஜனனி அய்யர்.

* வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தை, தானே தயாரித்து, நடித்து வருகிறார் பாபிசிம்ஹா.

* அஜித்துடன், வேதாளம் படத்தில், தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்ததை எண்ணி, இப்போது வருத்தப்படுகிறார் ஸ்ரீ திவ்யா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us