தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல

இதப்படிங்க முதல்ல

இதப்படிங்க முதல்ல


PUBLISHED ON : பிப் 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடிகர்கள் லிவிங்ஸ்டன், பொன்முடி உள்ளிட்டோர் சினிமாவில் நடிக்க வரும் புதுமுகங்களுக்கு, நடிப்பு பயிற்சி கொடுக்கும் பள்ளி நடத்தி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து, இப்போது, பேராண்மை பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனும் இலவச பயிற்சி பட்டறை ஆரம்பிக்க உள்ளார். இதில், டைரக்ஷன் சம்பந்தப்பட்ட பயிற்சி மட்டுமே வழங்கப்படும் என்கிறார். — சினிமா பொன்னையா.

ஓவியா சினிமா கனவு!

மன்மதன் அம்பு படத்தில், கெஸ்ட் ரோலில் நடித்த நடிகை ஓவியாவை, அதன் பிறகு முக்கிய கேரக்டரில் நடிக்க சில டைரக்டர்கள் அணுகினர். ஆனால், அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார் ஓவியா. 'கமல் சார் படத்தில் ஒரு சீனிலாவது நடித்து விட வேண்டும் என்பது, என் சினிமா கனவாக இருந்தது. அதைத்தான் அப்படத்தில் நிறைவேற்றிக் கொண்டேன். இருப்பினும், இதைத் தொடர மாட்டேன்...' என்று விளக்கமும் கொடுத்துள்ளார். தின்ன தவிடு இல்லை; தங்க சரப்பளி தொங்கத் தொங்க ஆடுதாம்! — எலீசா.

வினயன் படத்தில் மேக்னா!

காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்த மேக்னா, தற்போது மலையாள இயக்குனர் வினயன் இயக்கும், காதல் வேதம் படத்தில், 'புக்' ஆகி உள்ளார். 'தீவிரவாதத்தை எதிர்த்து போராடும் கதை என்பதால், இப்படத்தில் எனக்கு நடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது...' என்று சொல்லும் மேக்னா, இப்படத்தில், முதன் முறையாக அனல் பறக்கும் அதிரடி வசனங்கள் பேசி நடித்துள்ளதாகவும் சொல்கிறார். வருந்தினால் வராதது ஒன்றும் இல்லை! — எலீசா.

அபர்ணாவுக்கு வந்த ஆசை!

ஈசன் படத்தில் நடித்த அபர்ணாவுக்கு, அப்படத்தில் தன் திறமையை சரியாக பயன்படுத்தவில்லை என்ற வருத்தம் உள்ளது. அதனால், இனி நடிக்கிற படங்களில் தனக்கு வெயிட்டான ரோல் என்றால் மட்டுமே, ஏற்க போவதாக கூறுகிறார். மேலும், கவர்ச்சிக்கு தடையேதுமில்லை என்று தாராளமாக பேசும் அபர்ணாவுக்கு, நெகடிவ் ஹீரோயின் ரோல்களில் நடிப்பதில்தான் ஆர்வம் அதிகம் என்கிறார். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை. — எலீசா..

தமன்னா புதிய கொள்கை!

டூ-பீஸ் நடிகையாகிவிட்ட தமன்னா நடித்த படங்களுக்கு, இளசுகள் மத்தியில் மவுசு கூடியிருப்பதால், வினியோகஸ்தர்களும் தமன்னா படங்களை வாங்க போட்டி போடுகின்றனர். இதை தெரிந்து கொண்ட தமன்னா, சமீப காலமாக கவர்ச்சிக்கேற்ற கூலி என்றொரு புதிய கொள்கையை அமலுக்கு கொண்டு வந்துள்ளார். விளைவு, 60 லட்ச ரூபாயில் இருந்த அவரது சம்பளம், தற்போது, கோடி ரூபாயைத் தொட்டு நிற்கிறது. ஆள் ஏறினால் உலை ஏறும்; உலை ஏறினால் உப்பு ஏறும் என்ற கதை. — எலீசா.

பிசினஸ் மைண்ட் கொண்ட கார்த்திகா!

கோ படத்தில் நடித்துள்ள ராதாவின் மகள் கார்த்திகா, பிசினஸ் மைண்ட் கொண்டவர். அதனால், அம்மா ராதா, சினிமாவில் இறக்கிவிட திட்டமிட்ட போது, 'பிசினசில் பெரிய ஆளாகப் போகிறேன்...' என்று நடிக்க வர மறுத்துள்ளார். ஆனால், ராதா மற்றும் அம்பிகா இருவரும் தாங்கள் நடித்த பட, 'சிடி'களை கார்த்திகாவுக்கு போட்டுக் காட்டி, சினிமா ஆசையை ஏற்படுத்தி, வலுக்கட்டாயமாக நடிப்புக் களத்தில் இறக்கி விட்டுள்ளனர். எண்ணிய எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய்! — எலீசா.

மன்மதன் அம்புவுக்கு பிறகு, தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கவிருந்த கமல், மீண்டும் அப்படத்தை கிடப்பில் போட்டு விட்டார். மாறாக, செல்வராகவன் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்க, கால்ஷீட் கொடுத்துள்ளார். இதில், கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். — சினிமா பொன்னையா.

அங்காடித்தெரு படம், அப்பட நாயகி அஞ்சலிக்கு திருப்பமாக அமைந்தபோதும், பட நாயகனான மகேஷûக்கு கை கொடுக்கவில்லை. பல மாதங்களாக கம்பெனிகளுக்கு ஏறி, இறங்கிக் கொண்டிருந்த மகேஷûக்கு, வெயிலோடு விளையாடு என்ற படம் கிடைத்திருக்கிறது. இதில், கைப்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார்.

அவ்ளோதான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us