PUBLISHED ON : மே 01, 2011

கமலின் விஸ்வரூபம்!
செல்வராகவன் இயக்கத் தில், கமல் நடிக்கும் படத்திற்கு, விஸ்வரூபம் என்று பெயர் வைத்துள்ளனர். இது, ஏற்கனவே சிவாஜி கணேசன் நடித்த படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கமலுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் இப்படத்தின், 50 சதவீத படப்பிடிப்பு, அமெரிக்காவில் நடக்கிறது. இப்படத்துக்காக உடற்கட்டை குறைத்து, இளவட்ட பையன் போல் காட்சி தருகிறார் கமல்.
— சினிமா பொன்னையா.
நழுவுகிறார் மேக்னா!
காதல் சொல்ல வந்தேன் பட நாயகி மேக்னாவை, 'நயன்தாரா போல் இருக்கிறாய். அதனால், அவரை போல் நடித்தால், நீயும் பெரிய நடிகையாகி விடலாம்...' என்று சிலர் கவர்ச்சியாக நடிக்க ஆசை காட்டினர். ஆனால், மேக்னாவோ, 'நான் நயன்தாரா மாதிரி இருந்தாலும், அவர் அளவுக்கு கவர்ச்சி எனக்கு, 'செட்' ஆகாது. தற்போது நடித்து வரும், கள்ளச் சிரிப்பழகா, காதல் வேதம், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்கள், தமிழில் எனக்கு திருப்புமுனையாக அமையும்...' என்றும் கூறுகிறார். ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தனை ஒன்பதாயிரம்!
— எலீசா.
மீண்டும் சித்தார்த்!
ஏழு வருடங்களுக்கு பிறகு, 180 என்ற படத்தின் மூலம், மீண்டும் தமிழுக்கு வருகிறார் சித்தார்த். அவரிடம், 'மணிரத்னம், ஷங்கர் மாதிரியான முன்னணி இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறதே...' என்று கேட்டால், மறுக்கிறார். 'கதை பிடித்திருந்தால் புதுமுக டைரக்டர், பிரபல டைரக்டர் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை நான். இதுவரை, 14 படங்களில் நடித்துள்ளேன். அதில், ஒன்பது, புதிய டைரக்டர்களின் படங்கள்தான்...' என்று சொல்லும் சித்தார்த், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பரவலாக நடித்து வருகிறார்.
— சி.பொ.,
நகுலுக்கு நாயகி தேடும் படாதிபதி!
களவாணி படத்தை தயாரித்த நசீர், மீண்டும் அதே விமலை வைத்து, எத்தன் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதன் பிறகு, நகுலை வைத்தும் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதில், நகுலுக்கு ஜோடியாக நடிக்க வடக்கத்திய நாயகி தேடும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது.
— சி.பொ.,
சுஜிபாலாவுக்கு அட்வைஸ்!
குத்துப்பாட்டு நடிகையான சுஜிபாலா, முத்துக்கு முத்தாக படத்தில் கேரக்டர் ரோலில் நடித்திருந் தார். அதைப் பார்த்த கோடம்பாக்கத்தினர், 'இத்தனை நாளும் இந்த நடிப்பை எங்கு மறைத்து வைத்திருந்தாய்?' என்று கேட்டதோடு, 'இனி, இதே போல் திறமையை மட்டுமே காட்டு; குத்தாட்டம் போடாதே...' என்றும், 'அட்வைஸ்' செய்துள்ளனர். அதனால், தொடர்ந்து நல்ல வேடங்கள் கிடைத்தால், குத்துப்பாட்டை ஏறக்கட்டி விடும் முடிவில் உள்ளார். கொட்டி, கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காகுமா?
— எலீசா.
த்ரிஷா, அனுஷ்கா மறுத்த வேடத்தில் ப்ரியாமணி!
பேஷன் என்ற பெயரில், இந்தியில் வெளியான படம் தமிழில், 'ரீ-மேக்' ஆகிறது. அப்படத்தின் நாயகியாக பிரியங்கா
சோப்ரா நடித்த வேடத்தில் நடிக்க, இங்குள்ள த்ரிஷா, அனுஷ்கா ஆகியோரை அணுகினர். ஆனால், ஓவர் கிளாமர் என்று சொல்லி, அப்படத்தில் நடிக்க மேற்படி நடிகைகள் மறுத்து விட்டனர். ஆனால், இதை கேள்விப்பட்ட ப்ரியாமணி,
'கேரக்டருக்கு தேவையான கிளாமரை வெளிப்படுத்த நான் ரெடி...' என்று வலிய வந்து, அப்படத்தில், 'கமிட்' ஆகி உள்ளார். ஊ என்றாளாம் காமாட்சி; ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி. — எலீசா.
படத்துக்குப் படம் கிராமத்து அம்மா வேடங்களில் நடித்து வரும் சரண்யாவுக்கு, இளவட்ட நடிகர் - நடிகைகளுடன் இணைந்து நடிப்பதால், அதிக உற்சாகமாக உள்ளதாம். காரணம், 'இளசுகளோடு நடிக்கிற போது, எனக்குள்ளும் இளமையாகி விட்ட உணர்வு வருது. அதனால், கேரக்டர் முதிர்ச்சியானதாக இருந்தாலும், நானும் இளமையான நடிகை என்ற மனோபாவத்துடனேயே நடிக்கிறேன்...' என்கிறார்.
லட்சுமி ராயின் ஹாலிவுட் கனவு!
இந்திய சினிமா நடிகைகளில் பெரும் பாலானோருக்கு, இந்தி சினிமாவில் நடிப்பதுதான் அதிகபட்ச சினிமா கனவாக இருக்கும்; ஆனால், லட்சுமி ராய்க்கோ, ஹாலிவுட்டிலும் கொடி நாட்ட வேண்டும் என்ற கனவு உள்ளது. அதற்காக, அடிக்கடி ஹாலிவுட் சினிமா நண்பர்களுடன் மீட்டிங் போட்டு வந்த லட்சுமி ராய்க்கு, இப்போது ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படத்தில் நடிப்பதற் காக, இங்குள்ள படங்களை வேகமாக முடித்து வருகிறார்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!
