தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதுப்படிங்க முதல்ல....

இதுப்படிங்க முதல்ல....

இதுப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : மே 18, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 18, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

சிம்புவிடம் சிக்கிய பாண்டிராஜ்!

வாலு படத்தை முடிக்கும் வேலைகளில் இறங்கிய சிம்பு, தான் தயாரித்து வரும், இது நம்ம ஆளு படத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டு விட்டார். அதோடு, அப்படத்தை முதல் காப்பி அடிப்படையில் தயாரிக்கும் இயக்குனர் பாண்டிராஜுக்கு, இதுவரை பணமே கொடுக்கவில்லை. அதனால், முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, 70 லட்சம் ரூபாயை, பாண்டிராஜே தன் கையிலிருந்து கொடுத்துள்ளார். இந்த பணத்தை சிம்புவிடம் கேட்ட போது, 'பணம் வரட்டும் தருகிறேன்...' என்று, இழுத்தடிக்கிறார். பணம் வரும் போது வரட்டும் என்று, அடுத்த பட வேலையை துவங்கி விட்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

— சினிமா பொன்னையா.



ஸ்ரீதிவ்யா படக்கூலி எகிறியது!

'வில்லேஜ் இமேஜ் தன் கேரியரை பாதிக்கும்...' என, நினைத்த ஸ்ரீதிவ்யா, இப்போது, கிளாமர் ஹீரோயினியாக நடிக்க, தான் தயாராகி விட்டதாக கமர்சியல் படாதிபதிகளுக்கு, தூது அனுப்பியுள்ளார். அதனால், இதுவரை சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் விஷ்ணு என, வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் மட்டுமே அவரை சேர்த்தவர்கள், அடுத்து, ஆர்யா, விஷால் என்று ஜோடி சேர்க்க முன் வந்திருப்பதோடு, ஸ்ரீதிவ்யாவின் படக்கூலியையும் உயர்த்தியுள்ளனர். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!

— எலீசா

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன்!

மான் கராத்தே பெரிய ஹிட் இல்லை என்றாலும், சிவகார்த்திகேயனுக்கு, ஒரு பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. அதனால், இதுவரை, 'தனுஷ் இடத்தை பிடிக்க போகிறேன்...' என்று கூறி வந்தவர், இப்போது, 'விஜய் இடத்தை பிடிப்பதே என் லட்சியம்...' என்று, துணிச்சலாக கூறி வருகிறார். அதனால் தான், தற்போது நடித்து வரும், டாணா படத்தின் கதையோட்டம், நடனம் போன்ற விஷயங்களில், விஜய் பாணியை, நிறையவே கையாண்டு வருகிறார்.

— சி.பொ.,

மீண்டும் ஜோதிகா!

எஸ்.ஜே. சூர்யா இயக்கிய, வாலி படத்தில், அறிமுகமானவர் ஜோதிகா. அதன்பின், ஏராளமான படங்களில் நடித்த அவர், மொழி மற்றும் சந்திரமுகி படங்களில் நடித்து, சிறந்த நடிகைக்கான, மாநில அரசு விருதும் பெற்றார். ஆனால், திருமணத்திற்கு பின், முழு நேர இல்லத்தரசியாகி விட்ட அவரை, குழந்தைகளை மையமாக வைத்து, ஒரு படம் இயக்கும் இயக்குனர் பாண்டிராஜ், அப்படத்தில், ஒரு முக்கியமான ரோலில் நடிக்க ஜோதிகாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரீ-என்ட்ரி கொடுக்க சரியான தருணம் என்பதால், அப்படத்தில் நடிப்பது குறித்து, பரிசீலித்து வருகிறார் ஜோதிகா.

— எலீசா.

கமல் நடிக்கும் வீர விளையாட்டு!

உத்தம வில்லன் படத்தில், 8 மற்றும் 21 என, இரண்டு நுாற்றாண்டுகளைச் சேர்ந்த வேடங்களில் நடித்து வரும் கமல், அவரின் குருநாதரான, கே.பாலச்சந்தர் இயக்கத்தில், வீர விளையாட்டு என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில், ஒரு சிறிய ரோலில், ரஜினி முகம் காட்டி செல்வது போல் காட்சியமைத்திருப்பதால், அப்படம் திரைக்கு வரும் போது, கமல், ரஜினி தோன்றும் காட்சிகளை வைத்து, 'பப்ளிசிட்டி' செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

— சினிமா பொன்னையா.

கறுப்பு பூனை!

ஒரு காலத்தில், எந்நேரமும் குமரிக்கோட்டத்திலேயே உலவிக் கொண்டிருந்த அந்த நவரச நடிகர், இப்போது தன் வாரிசு நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு, 'விசிட்' அடித்து,

இளசுகளிடம் கடலை போடுகிறார். இந்த விஷயம், வாரிசுக்கு, டென்ஷனை ஏற்படுத்த, தந்தையை அடக்கும் முயற்சியாக, தான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு வருவதற்கு, தடை போட்டுள்ளார்.

படத்துக்கு இரண்டு கோடி கேட்கும், 'தாரா' நடிகை, தான் ஏற்கனவே கொடுத்த கால்ஷீட்டை வீணடித்து விட்டு, மீண்டும் கால்ஷீட் கேட்டால், கூடுதலாக ஐம்பது லட்சம் கேட்கிறார். விரல் வித்தை நடிகர் தயாரித்து, நடிக்கும் படத்தில், இதே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், தாராவுக்கும், அவருக்குமிடையே மீண்டும், மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

பீட்சா நடிகருடன், இரண்டு படங்களில் நடித்த, ரம்மி நடிகை, மூன்றாவதாகவும் ஒரு படத்தில் நடிக்க, கல்லெறிந்தார். ஆனால், அந்த வாய்ப்பை, ஒரு நான்கெழுத்து கன்னட நடிகை, தட்டிப் பறித்து விட்டார். இதனால், ஆவேசமான, ரம்மி நடிகை, அவரை வீழ்த்த, சதி திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்.

துளிகள்

* இந்திரஜித் படத்தில், ஆக் ஷன் வேடத்தில் நடிக்கிறார் கவுதம் கார்த்திக்.

* மாடர்ன் கேரக்டர்களை தவிர்த்து, வில்லேஜ் கேரக்டர்களுக்கே, முன்னுரிமை கொடுக்கிறார் நந்திதா.

* ஜெயம் ரவியுடன் நடிக்கும், தனி ஒருவன் படத்தில், ஒரு சண்டை காட்சியில் நடிக்கிறார் நயன்தாரா.

அவளோ தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us