
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனாவின் ஜிலிங் மாகாணத்தில் வசிக்கும் ஜாங் என்பவர், தன் குழந்தைகள் விளையாடுவதற்காக, 2,000 நுாடூல்ஸ்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அழகிய சின்னஞ்சிறிய வீட்டை கட்டியுள்ளார். இந்த வீட்டின் சுவர், மேல் பகுதி, படுக்கை அறை என, எல்லாமே நுாடூல்ஸ்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, காலாவதியான நுாடூல்ஸ்களை பாக்கெட் பாக்கெட்டாக வாங்கியுள்ளார், அவர்.
'இந்த ஐடியா உங்களுக்கு எப்படி ஏற்பட்டது...' என கேட்டால், 'நான் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். வித்தியாசமாக எதையாவது செய்யலாம் என நினைத்தபோது, இந்த எண்ணம் ஏற்பட்டது. உடனடியாக செயல்படுத்தி விட்டேன்...' என்கிறார், ஜாங்.
— ஜோல்னாபையன்

